இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

யோசுவா மற்றும் இஸ்ரவேலர்களைப் போலவே, தம்முடைய மக்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்படி தேவனானவர் தம்முடைய நியாயப்பிரமாண சட்டத்தை நமக்குக் கொடுத்தார் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும். தம்முடைய ஜனங்கள் அவருக்காக வாழவும், அவர்களுக்காகத் தம்முடைய சித்தத்தை அனுதினமும் வெளிப்படுத்தவும் தேவன் இஸ்ரவேலர்களுக்கு நியாயப்பிரமாண சட்டத்தைக் கொடுத்தார். அவர்கள் தேவனின் வழியில் வாழ்ந்தால், அவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்று அவர் வாக்களித்திருக்கிறார் . தேவனானவர் அவர்களை நேசிக்கும் அவர்களின் சிருஷ்டிகர். மனிதர்கள் அவர் உண்டாக்கின பிரபஞ்சத்தின் கொள்கைகளுக்கு இசைவாக வாழ்வதற்கான சிறந்த வழி அவருக்குத் தெரியும். அவருடைய சட்டம் அவரது மக்களின் மகிழ்ச்சியையும் அனுபவத்தையும் தடுக்கவோ அல்லது குறுக்கிடவோ விரும்பவில்லை. மாறாக, அது அவர்கள் வாழ்வில் செழித்து வெற்றியை காண உதவுவதாக இருந்தது. கலாத்தியருக்கு எழுதின நிருபத்தில் பவுலானவர் நாம் இனி நியாயப்பிரமாண சட்டத்தின் கீழ் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் நமக்கு நினைப்பூட்டுகிறார் . ஆனால், நாம் ஆவியானவரால் நடத்தப்பட்டு வாழும்போது, ​​உண்டாகும் குணாதிசயம் ஆண்டவராகிய இயேசுவின் குணாதிசயத்தை பிரதிபலிக்கிறது , அவரே நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றி(மத்தேயு 5:17-20) , உன்னதத்தில் உள்ள தேவன் உத்தேசித்துள்ள சகல ஆசீர்வாதங்களை நமக்குக் கொண்டுவந்தவர் . கீழே வரி: தேவனின் சித்தத்தைப் பின்பற்றி அவருடைய குணாதிசயங்களை பற்றிக்கொண்டு வாழ்வது நமக்கு ஒரு ஆசீர்வாதம் ! எனவே, பரிசுத்த ஆவியின் உதவியோடு, இயேசுவின் மாதிரியைப் பின்பற்றுவோம், அவருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவோம், மற்றவர்களை நாம் எப்படி நடத்துகிறோம் என்பதினால் அவருடைய சித்தத்தை நிரூபிப்போம்! அவ்வாறு செய்வதன் மூலம், நாம் நியாயப்பிரமாணத்தின் நியாயமான தேவைகளை நிறைவேற்றுகிறோம், ஆனால் நாம் தேவனின் கிருபையினால் உற்சாகம்கொண்டு , பரிசுத்த ஆவியினால் பெலப்படுத்தப்படுகிறோம்!

என்னுடைய ஜெபம்

அன்பான பிதாவே , உம்முடைய சித்தத்தை மனிதன் புரிந்துக்கொள்ளும் வார்த்தைகளினால் சொன்னதற்காக உமக்கு நன்றி, அதனால் உமக்காக எப்படி வாழ வேண்டும் என்பதை நான் நன்றாக அறிந்துகொள்ள முடியும். உம் விருப்பத்திற்குக் கீழ்ப்படிந்து வாழ்வதினால் என்னையும், என்னைச் சுற்றியுள்ளவர்களையும் ஆசீர்வதிப்பதாக நான் அறிவேன். உம் நீதியுள்ள குணம், கிருபை நிறைந்த இரக்கம், மெய்யான அன்பு ஆகியவை என் வாழ்விலும், இன்னுமாய் பிறர் மீதும் நான் ஏற்படுத்தும் தாக்கத்தையும் முழுமையாக உணரும்படி உம் பரிசுத்த ஆவியினால் எனக்கு அதிகாரம் தாரும் . இயேசுவின் பரிசுத்த நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து