இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

மகிழ்ச்சியாக இருக்கும்போது பாடுவோம். மனம் நொறுங்கும் போது பாடுவோம். இன்று நாம் நன்றியுடன் பாடுகிறோம். கடவுள் நம் எல்லாப் புகழுக்கும் தகுதியானவர் மட்டுமல்ல, நம்முடைய எல்லா நன்றிக்கும் தகுதியானவர். ஆனால் நம் எல்லாப் பாடல்களுக்கும் அடிப்படையாக இருப்பது இயேசுவே, அவர் மூலமாக நமக்கு வாழ்வளிக்கும் நற்செய்தியின் பிரகடனம். அந்தச் செய்தி, கிறிஸ்துவின் அந்த வார்த்தை நம் இருதயங்களை நிரப்புவதால், உன்னதமானவரின் நன்றியுள்ள குழந்தைகளாக நாம் இருக்கிறோம்.

என்னுடைய ஜெபம்

ஆண்டவரே, நீர் என் வாழ்க்கையில் பொழிந்த அநேக ஆசீர்வாதங்களுக்காக நான் இன்று மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். உம்முடைய அன்பும், கிருபையும் , இரக்கமும் , மன்னிப்பும் எனக்கு எதிர்காலத்திற்கான நம்பிக்கையைத் தருகின்றன. இயேசுவின் மூலமாய் நீர் அருளின ஈவு இன்று எனக்கு வாழ்வைத் தருகிறது, நாளையின் வாழ்கைக்கு உறுதியளிக்கிறது. நம்பமுடியாத சரீர ஆசீர்வாதங்களும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆசீர்வாதங்களும் அற்புதமானவை. ஆனால், எல்லா ஆசீர்வாதங்களிலும் மிகப் பெரியது, ஒரு நாள் நான் உம்மை முகமுகமாய் பார்ப்பேன் என்றும் மற்றும் உம்முடைய மகிமையையுள்ள சமூகத்திலே நித்ய காலமாய் வாழ்வேன் என்ற வாக்குறுதிக்காக உமக்கு நன்றி. இயேசுவின் நாமத்தினாலே நான் உமக்கு நன்றி செலுத்துகிறேன், துதிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து