இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
பவுலானவர் இந்த வார்த்தைகளை கொலோசெயில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு எழுதினார், ஆனால் இதற்கு முன்பாக அவர் அங்கு சென்றதில்லை. அவர்களை "முகமுகமாய் " சந்திக்காததினால் அவருக்கு அவர்களை குறித்து அதிக ஞானம் இல்லாத போதிலும், அவர் கொலோசியர்களை திறம்பட ஆவிக்குரிய பிரகாரமாக நடத்தினார் . தேவனையும் அவர்களுக்காக அவருடைய சித்தத்தையும் அவர்கள் நன்றாக அறிந்துகொள்ள அவர் குறிப்பாக ஜெபித்தார். இயேசுவின் நற்செய்தியை எப்பாப்பிரா அவர்களுக்குப் பிரசங்கித்தபோது அவர்கள் அதை முழுமையாகப் பெற்றதாக அவர் உறுதியளித்தார் (கொலோசெயர் 1:7, 4:12). என்ன ஒரு சிறந்த யோசனை! ஒரு சுவிசேஷ சபை (உள்நாட்டில் , வெளிநாட்டில், அல்லது ஒரு தொலைதூரத்தில் உள்ள தனிமையான சூழலில் நடப்பட்ட சபை ) கண்டுபிடித்து, அந்த சபைக்காக தொடர்ந்து ஜெபிப்போம், தேவனை அவர்கள் அறியவும், அவருடைய சித்தத்தை இன்னும் முழுமையாக அறிந்து கொள்ளவும், மேலும் அவர்களுக்கான அன்பை அவர்களுக்கு உறுதிப்படுத்தவும் உதவுங்கள்.
என்னுடைய ஜெபம்
பரிசுத்தமான மற்றும் சர்வ வல்லமையுள்ள தேவனே, எனது திருச்சபை குடும்பத்திற்காக உமது இயல்பு, குணம் மற்றும் கிருபை பற்றிய ஆழமான ஞானத்தையும் ஊக்கத்தையும் அளித்தருளும். மேலும் , வளர்ச்சி, ஆரோக்கியம் மற்றும், உம்மைப் பற்றிய அறிவுடன் ஆசீர்வதிக்கவும். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.