இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஜனங்களை வகைப்படுத்தி வைத்திருக்க நியாயபிரமாணங்கள் இல்லை என்றால் நன்றாக இருக்கும் அல்லவா! அதுதான் இங்கே பவுலின் செய்திக்குப் பின்னால் உள்ள நோக்கம் . நாம் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று விரும்புகிறோமோ அப்படியே பிறனையும் நடத்த வேண்டும் . நம்மை நாம் அன்புகூருகிறது போலப் பிறனிடத்திலும் அன்புகூரவேண்டும் . நாம் அதைச் செய்தால், எவ்விதத்திலும் மற்றவர்களை துன்புறுத்துகிறவர்களாயிருக்கமாட்டோம் , ஆதலால் அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது.

என்னுடைய ஜெபம்

மோசேக்கு கற்பலகைகளில் நியாயப்பிரமாண சட்டத்தை கொடுத்த தேவனே , நான் உமது நீதிக்கும்,கிருபைக்கும் சாட்சியாக ஜீவனுள்ள கல்லாக என்றென்றும் இருக்க உம் குணாதிசயத்தையும் விருப்பத்தையும் என் இருதயமாகிய கற்பலகையில் எழுதுங்கள். இன்று மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் நான் எந்த காரியத்தையும் செய்வதற்கும், செயல்படுவதற்கும் முன்னும் பிறர் எப்படி உணருகிறார்கள் என்பதைப் பற்றி மிகவும் கவனமாக சிந்திக்க எனக்கு உதவிச் செய்தருளும்! உம்முடைய குமாரனாகிய இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து