இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இரட்சிப்பு மிகவும் விலையேறப்பெற்றது ! இருப்பினும், ஒரு பிள்ளை தனது வளரும் பருவத்தில் மற்றும் முதிர்ச்சியில் ஒரே இடத்தில் தொடர்ந்து இருந்தால், ஏதோ ஒரு பெரிய பாதிப்பு இருக்கிறது என்று நமக்குத் புரிகிறது . இப்படி சரீர வளர்ச்சி தடைபடுவது நம் கவலைக்கான காரணமாகிறது. இதை எபிரேயர் 6ஆம் அதிகாரம் நமக்கு நினைவூட்டுகிறது, அது போல நமது ஆவிக்குரிய வாழ்விற்கும் பொருந்தும். நாம் முதிர்ச்சியடையாமல், குழந்தைகளைப் போல இருப்பதை தேவன் விரும்புவதில்லை! நாம் தொடர்ந்து வளர வேண்டும் என்று அவர் விரும்புகிறார். (திரு வசனம் ) நன்மை எதுவோ, எவைகள் நம்மை வளரச்செய்கிறதோ அதின் மேல் வாஞ்சையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று நம் பிதா விரும்புகிறார் .எனவே, நம் ஆத்தும தாகத்தை போக்கவும், கிருஸ்துவுக்குள் வளரவும் இன்று என்ன செய்யப் போகிறோம் ?

என்னுடைய ஜெபம்

சர்வ வல்லமையுள்ள தேவனே , என்னை நேசித்து என்னைக் இரட்சித்ததற்காக உமக்கு நன்றி. உமது கிருபையில் நான் வளர்ந்து பெறுக விரும்புகிறேன். நான் வளர உதவும் பரிசுத்தமான குணாதிசயங்களின் மாதிரியை என் வாழ்வில் வேண்டும்பொழுது பரிசுத்த ஆவியினால் என்னை நிரப்பி இன்றே ஆசீர்வதியும் . ஆனால் பரிசுத்தமுள்ள தேவனே , மெய்யான வளர்ச்சி உம்மிடமிருந்து மட்டுமே வருகிறது என்பதை நான் அறிவேன், எனவே நான் உமது குணாதிசயத்தை பின்பற்றும்போது உமது ஆவியால் என்னை பலப்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன். இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து