இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

யாக்கோபின் சகோதரராகிய இயேசு சூம்பின கையுடைய ஒரு மனுஷனை ஓய்வுநாளில் சுகமாக்கிய போது (மாற்கு 3:1-7) இந்த வார்த்தைகளை அவர் போதித்தார். பின்பு அவர் நல்ல சமாரியனின் உவமையைச் சொன்னார் (லூக்கா 10:29-37) . தேவையில் இருக்கும் ஒருவனுக்கு நன்மைசெய்ய நமக்கு வாய்ப்பும், திராணியும் இருக்கும் போது அதைச் செய்யாமல் இருந்தால் அது பாவமாக எண்ணப்படும். தேவையில் இருக்கும் இன்னொருவருக்கு நன்மை செய்யாமல் விட்டுவிடுவது, அதைச் செய்யாமல் இருப்பதற்கு மதத்தின் பேரில் சாக்குப்போக்கு இருந்தாலும், அது தீமையே என்பதை ஆண்டவர் தெளிவுபடுத்தினார் . நன்மை செய்வதற்கும் இரக்கத்தை பகிர்வதற்கும் பெயர் பெற்ற மக்களாக இருப்போம். இயேசுவின் நாமத்தால் மற்றவர்களுக்கு ஊழியஞ் செய்வதற்கான நமது மகிமையான மற்றும் பரிசுத்தமான வாய்ப்புகளில் எந்த ஒரு சாக்குப்போக்கு சொல்லாமல் , குறிப்பாக ஒரு மதத்தினால் சாக்குப்போக்கு குறுக்கிட அனுமதிக்க வேண்டாம்.

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பிதாவே, இன்றே என்னைப் பயன்படுத்தி, தேவையிலுள்ள ஒருவரை ஆசீர்வதித்து, அவர்கள் உமது கிருபையை அறிந்துக் கொள்வதால் , உமது குமாரனும் என் இரட்சகருமான இயேசு மகிமைப்படுவார். இயேசுவின் இனிமையான மற்றும் விலையேறப்பெற்ற நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து