இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
தற்செயலான தயவுள்ள செயல்கள் என்று எதுவும் இல்லை, நாம் அறிந்து ஒரு நோக்கத்தோடே செய்யப்படும் செயல்களே காலத்தைப் பிரயோஐனப்படுத்திக்கொள்ளும். நாம் செய்யக்கூடிய நன்மைகளைப் பற்றி சிந்திப்போம். அன்புள்ள மற்றும் நன்மை பயக்கும் வழிகளில் நாங்கள் நடக்கும்படி எங்களை ஒப்புவித்திருக்கிறோம் . நாங்கள் தயவுள்ளவர்களாய் இருக்க எங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப் பட வேண்டும் என்று ஜெபிக்கிறோம் . பின்னர் அந்த வாய்ப்பு நம்மை தயவுடன் இருக்க அழைத்து செல்கிறது . இதில் தற்செயலாக எதுவும் இல்லை! இது கிரியைகளினால் மாத்திரமல்ல, வார்த்தைகளிலும் மெய்யாய் இருக்கிறது . வீணான வார்த்தைகளினால் அலப்புவதை விட , மற்றவர்களை ஆசீர்வதிக்கவும், இன்னுமாய் கிறிஸ்துவை அறிந்துகொள்ள உதவவும் நல் வார்த்தைகளையே பயன்படுத்துமாறு வலியுறுத்தப்படுகிறோம்.
என்னுடைய ஜெபம்
பிதாவே , இந்த வாரம் நான் பிதற்றின வார்த்தைகளுக்காக அடியேனை மன்னியுங்கள். இந்த கவனக்குறைவான வார்த்தைகள் இரு மடங்கு பாவங்களுக்கு சமம் என்பதை நான் புரிந்துகொள்கிறேன் - நான் அதைச் செய்தபோது ஒரு முறை பாவத்திற்குள்ளானேன் மற்றும் இரண்டாவது முறையும் பாவம் செய்தேன் , என்னுடைய வார்த்தையில் உண்டாகும் மீட்பையும், அந்த வார்த்தையினால் அவர்களுக்கு உதவும் படியான வாய்ப்பையும் நான் நோக்கிப் பார்க்கவில்லை . ஆண்டவரே, என் வாழக்கையின் பாதையில் நீர் ஆசீர்வதிக்க வைத்த மக்களை நான் காணும்படியாய் என் கண்களைத் திறந்தருளும் . ஆசீர்வதிக்கப்பட்ட இயேசுவின் நாமத்தின் மூலமாய் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.