இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஒவ்வொரு கிறிஸ்தவரின் மீதும் "புதியவர்கள் மற்றும் மேம்படுத்தப்பட்டவர்கள் !" என்று முத்திரையிடப்பட வேண்டும்! நாம் கிறிஸ்துவிடம் வரும்போது, ​​அவர் நம்மைப் புதியவராக்கி, நம்முடைய எல்லா பாவங்களிலிருந்தும் நம்மைச் சுத்திகரிக்கிறார். எண்ணி முடியாதபடி, தேவனின் உண்மைத்தன்மை மற்றும் மறுரூபமாகும் வல்லமையின் காரணமாக இந்த கிருபை " காலைதோறும் புதியதாக" இருக்கும் (புலம்பல் 3:23). தேவன் தம்முடைய பரிசுத்த ஆவியின் மூலமாக இந்தப் புதிய வாழ்க்கைக்கான கிருபையை நமக்குத் தருகிறார். நாங்கள் புதியவர்கள் மற்றும் மேம்பட்டவர்கள். பரிசுத்த ஆவியானவர் நம்மை முழுமையாக இயேசுவைப் போல மறுரூபமாக்கும் வரை (2 கொரிந்தியர் 3:18) நாம் பிதாவை முகமுகமாய் மகிமையில் சந்திக்கும் வரை (1 யோவான் 3:2) நாம் அப்படியே இருப்போம்.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள பிதாவே , என் இருதயம், விருப்பம், வாழ்க்கை மற்றும் நேரம் ஆகிய யாவும் உமது சித்தத்தை கொண்டிருக்க வேண்டும். நீர் என்னைப் புதியவனாகவும், மேம்பட்டவனாகவும் ஆக்குவதற்கு, நான் உம்மிடம் என்னை ஒப்புக்கொடுக்க விரும்புகிறேன். நீர் என்னை எவ்வளவு தூரம் கொண்டு வந்தீர்கள் என்பதில் நான் திருப்தி அடைய விரும்பவில்லை. இல்லை, அன்பான பிதாவே , நான் மகிமையுடன் உம் நித்திய வீட்டிற்கு வரும் வரை ஒவ்வொரு நாளும் இயேசுவைப் போல் ஆக விரும்புகிறேன். உம் அதிகாரமளிக்கும் கிருபைக்காக நன்றி. இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து