இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசு பரிபூரணமானவர், மாசற்றவர், பரிசுத்தமானவர், நீதியுள்ளவர், சுத்தமானவர். ஆயினும் அவர் வெறுக்கப்பட்டவர் ஆனார்: பாவம். உலகத்தின் பாவ பாரத்தைச் சுமந்துகொண்டு சிலுவையில் அதைச் செய்தார். அப்படியென்றால், இயேசு ஏன் அப்படிச் செய்தார்? ஏனென்றால், கர்த்தர் நம்மை நேசித்தார், மேலும் அவர் என்னவாக இருக்க வேண்டும் என்று விரும்பினார்: தேவனுடைய நீதியாக . பாவத்தை வெறுத்ததை விட தேவன் நம்மை நேசித்தார் என்பதே இயேசு பூமிக்கு வந்ததின் பெரிய உண்மை (யோவான் 3:16-17). தேவன் , எல்லா மக்களிடமும் தேவனுடைய அன்பை வெளிப்படுத்துவதற்காக இயேசு பாவம் மற்றும் மரணம் நிறைந்த நமது உலகில் நுழைந்தார், பின்னர் நம்மை தேவனுடைய நீதி விளங்க தம்மை ஒப்படைத்தார். வார்த்தைகள் போதுமான அளவு விவரிக்க முடியாத அளவுக்கு மிகப் பெரிய ஈவு , அவருடைய ஈவுக்காக தேவனைப் போற்றுங்கள்!

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள மற்றும் அன்பான பிதாவே , இயேசுவின் தியாகத்தால் என்னைப் பரிசுத்தமாக்கி - உமது நீதிக்காக - இயேசுவை சிலுவையில் தந்ததற்கு நன்றி. அன்பான இரட்சகரே, சிலுவையில் மரித்ததின் மூலம் மட்டுமல்ல, என் பாவமாகி, என் குற்றத்தை சுமந்துகொண்டு இவ்வளவு பயங்கரமான விலையைச் செலுத்தியதற்காக நன்றி. அன்பான பிதாவே , உமது திட்டத்திற்காக உமக்கே எல்லா கனமும், துதியும் செலுத்துகிறேன் , அன்பான இயேசுவே, உமது அன்பான தியாகத்திற்கு நன்றியும் மகிமையும் உமக்கே. ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து