இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
வெளிப்புறதோற்றத்திற்கு மயங்கி, கிரியையை விட நோக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் உலகில் , தெசலோனிக்கேயே பட்டணத்தில்லுள்ள சீஷர்களின் விசுவாசம் , நம்பிக்கை மற்றும் அன்பு ஆகியவை இயற்கையாகவே சில நற்கிரியைகளை உருவாக்கும் என்று பவுல் எதிர்பார்ப்பதும் - நன்றி கூறுவதும் உங்களுக்கு புத்துணர்ச்சி தருவதாக தெரியவில்லையா? விசுவாசம் கிரியையை உருவாக்குகிறது. அன்பு பிரயாசத்தை உண்டுபண்ணுகிறது . நம்பிக்கை நீடிய பொறுமையை ஊக்குவிக்கிறது. இந்த புதிய கிறிஸ்தவர்கள் இந்த நிலைத்துநிற்கிற மூன்று நற்பண்புகளில் சிறந்து விளங்கினர் (1 கொரிந்தியர் 13:13), மேலும் இந்த நற்பண்புகள் அவர்களின் கிரியை, பிரயாசம் மற்றும் பொறுமைக்கு வழிவகுத்தன!
என்னுடைய ஜெபம்
மகத்துவமுள்ள தேவனே எங்கள் மீட்பரே, என்னுடைய வெளியரங்கமான விசுவாசம் , நம்பிக்கை மற்றும் அன்பின் மூலமாய் உம்மை கனம்பண்ண விரும்புகிறேன். தயவு செய்து உமது பரிசுத்த ஆவியினால் என்னை உயிர்ப்பித்து புத்துணர்ச்சியூட்டுங்கள், அப்பொழுது உம்முடைய கிருபையையும், குணாதிசயத்தையும் நினைவுக்கூர்வதினால் என் வாழ்க்கை முழுவதும் கிரியையினால் நிறைந்திருபதாக. இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.