இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
குறைபாடுள்ள மற்றும் பாவமுள்ள மனிதர்களாக நமக்குத் தகுதியான சம்பளத்தைப் பெற்றால், நாம் தேவனுக்கு முன்பாக நிற்கும்போது, நம் வழக்கை வாதாட முயற்சிக்கும் போது, நமக்கு அளிக்கப்படும் சம்பளத்தை விரும்ப மாட்டோம். மறுபுறம், இரக்கத்திலும் கிருபையிலும் ஐசுவரியமுள்ள பரலோகத்தின் தேவன் , இயேசுவின் தியாகம் மற்றும் அவர் மீது நாம் வைத்திருக்கும் நம்பிக்கையின் காரணமாக இரட்சிப்பின் ஈவை நமக்குத் தருகிறார். கிறிஸ்து நம்முடைய ஆண்டவராகவும்,இரட்சகராகவும் இருந்தால், நாம் தகுதியானதைப் பெறவோ அல்லது பாவத்தின் கொடூரமான சம்பளத்தை பெறவோ மாட்டோம். அந்த கடனை, பாவம் மற்றும் மரணத்தின் சம்பளத்தை செலுத்த அவர் மரித்தார் . மாறாக, தேவன் மற்றும் அவருடைய பரிசுத்த தூதர்களின் மகிமையான பிரசன்னத்தில் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளுவோம் . உங்களைப் பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் அடியேன் இன்னும் அதிகமாய் அவருக்கு அதிக ஆர்வத்துடனும் உண்மையுடனும் ஊழியம் செய்யத் தூண்டுகிறது!
என்னுடைய ஜெபம்
மகிமையும் கிருபையும் நிறைந்த பிதாவே , எல்லா வகையிலும் பரிசுத்தமும் பரிபூரணமுமான உமது கிருபையின் பலிக்காகவும் , இது உமது பரிபூரணமான நீதிக்கும் எனது அழுக்கான பாவத்திற்கும் இடையே பெரிய இடைவெளிக்கு பாலமாக இவை அமைந்ததற்காக நன்றி . நித்திய வாழ்வின் ஈவுக்காக நன்றி. என்னுடைய மரணதிற்கு பின் உண்டாகும் வாழ்க்கை உமக்குப் பரிசுத்தமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கட்டும். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.