இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நமது கலாச்சாரம் மற்றும் நமது தேசத்தின் தேவன் என்னவாகயிருக்கிறார் ? நிச்சயமாக நம்முடைய தேவன் கர்த்தரும், யாவே -வாகிய மெய்தேவனும், இஸ்ரவேலின் ராஜாவும், காணாமற்போனவர்களின் மீட்பருமாவார். அவர் எல்லா தேசங்ளுக்கும் ராஜாதி ராஜாவாயிருக்கிறார் . ஆனால் அவர் நம் தேசத்தின் தேவன் அல்ல. நாம் "தேவனின் கீழ் உள்ள ஒரே தேசத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கிறோம். ஆனால் நம் இடத்தை பரிசுத்தப்படுத்த, அதின் மறுமலர்ச்சிக்காக நாம் ஜெபிக்கலாம். நம் சொந்த வாழ்க்கையில் அவருக்கு முதலிடம் கொடுக்காததற்காக நாம் வருந்தலாம். நாம் நம்மைத் தாழ்த்தி அவரைத் தேடினால் பதிலளிப்பதாக உறுதியளித்துள்ளார். இன்று முதல் அதை செய்வோமாக!

என்னுடைய ஜெபம்

பரலோகத்தின் தேவனும் , எல்லா தேசங்களின் பிதாவுமாகிய ஆண்டவரே, என் சொந்த பாவத்தையும் என் மக்களின் பாவத்தையும் ஒப்புக்கொண்டு, இன்று நான் உமக்கு முன்பாக என்னைத் தாழ்த்துகிறேன். உமது வார்த்தையின் வல்லமையினாலும், உமது ஆவியின் பரிசுத்தமாக்கும் வல்லமையினாலும் எங்களை உயிர்ப்பிப்பதற்காக நான் ஜெபிக்கிறேன். எங்கள் நிலத்தில் புதுப்பித்தல் மற்றும் மறுமலர்ச்சியைக் கொண்டு வாருங்கள். இயேசுவின் நாமத்தினாலே, ஆவியின் வல்லமையாலும் நான் இதைக் கேட்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து