இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
தேவனுடைய மக்கள் மீண்டும் மீண்டும் கலகம் செய்து, அவர்களின் கேட்காத காதுகளையும் கடின இதயங்களையும் தேவனின் விருப்பத்திற்கு எதிராகத் திருப்பத் தேர்ந்தெடுத்ததால், பரலோகத்தின் தேவன் தம்முடைய மக்கள் தங்கள் பாவத்தின் பலனை எதிர்கொள்ள அனுமதித்திருந்தார். அவர்களின் வேரூன்றிய எதிர்க்கும் குணத்தின் காரணமாக, மிகக் கடுமையான நிலைப்பாட்டை பயன்படுத்தி அவர்களை நியாயந்தீர்க்க அவர் தயாராக இருந்தார்; அவரது பரிசுத்தமான மற்றும் அன்பான விருப்பத்துடன் ஒப்பிடும்போது அவர்களுடைய எதிற்கும் குணம் அதிகமாய் இருந்தது . எசேக்கியேலின் நாளில் தம்முடைய ஜனங்களை அவர் விரும்பியதைப் போலவே, நம் நாளில் நாம் அவருடைய பரிசுத்த மக்களாக இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்பதை நாம் நம் நினைவில் கொள்ள வேண்டும். நம் கலாச்சாரத்தின் அறம் எவ்வளவு மேலானதாக இருந்தாலும் மற்றும் அது நம்மை தேவனின் விருப்பத்திலிருந்து எவ்வளவு தூரம் விலகியிருந்தாலும், அவருக்கு எப்பொழுதும் உண்மையானவர்களாக இருப்போம். அழிந்து போகும் உலகத்தில் உப்பாகவும், இருளாம் உலகத்தில் வெளிச்சமாகவும் இருக்க இயேசு நம்மை அழைத்துள்ளார் (மத்தேயு 5:13-16; யோவான் 3:16-21; பிலிப்பியர் 2:12-16).
என்னுடைய ஜெபம்
அன்புள்ள தேவனே , தயவுக்கூர்ந்து உம்முடைய உக்கிரத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும் , ஆனால் என் வாழ்க்கையின் சூழ்நிலை அல்லது என்னைச் சுற்றியுள்ள கலாச்சாரத்தைப் பொருட்படுத்தாமல் உமக்காக வாழ என்னை ஊக்குவித்தருளும் . நான் செய்வதிலும், சொல்வதிலும், நினைப்பதிலும் உமக்கு எப்பொழுதும் உண்மையாக இருக்க விரும்புகிறேன். என்னைச் சுற்றியுள்ள உலகம் இருளில் சிக்கியுள்ளது, எனவே என்னைச் சுற்றியுள்ள மக்களுக்கு உம்முடைய ஒளியையும் வாழ்க்கையையும் கொண்டு வர அடியேனை எடுத்து பயன்படுத்தும் . நான் என் வாழ்க்கை பாதையில் உம்மை கனப்படுத்த முற்படுகையில், தயவுசெய்து நான் உமக்கான மதிப்புகளை சமரசம் செய்யவோ அல்லது உம் விருப்பத்திலிருந்து விலகிச் செல்லாதபடி எனக்கு ஞானத்தை தாரும் . இயேசுவின் நாமத்தினாலே , உம் கிருபையிலிருந்து இந்த ஈவுகளுக்காக நான் கெஞ்சி கேட்டு ஜெபிக்கிறேன். ஆமென்.