இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
வாழ்க்கை பெரும்பாலும் பரபரப்பு நிறைந்திருக்கும் , இன்னுமாய் அநேக கவனச்சிதறல்கள் மற்றும் "செய்ய வேண்டியவைகளின் " பட்டியல் நிறைந்திருக்கும் ஒன்றாகும் . என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் செய்ய வேண்டியதென்று நீங்கள் அறியீர்களா என்றார். (லூக்கா 2:49) அவைகளிலிருந்து "பரபரப்பான வாழ்க்கை காரியங்கள் "நம்மைத் தடுத்து விடக்கூடாது. அவருக்கும் அவருடைய மக்களுக்கும் ஊழியம் செய்ய தேவன் நமக்கு தந்தருளும் வரங்களை கண்டுப்பிடித்து (1 பேதுரு 4:10-11); பிறகு, நம் பிதா நமக்கு கொடுக்கும் ஊழியத்தை முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும், மனதோடும், பலத்தோடும் செய்வதற்கு நம்மை அர்ப்பணிப்போம் (மாற்கு 12:30).
என்னுடைய ஜெபம்
கிருபையுள்ள தேவனே , நீர் அடியேனை பல வழிகளில் ஆசீர்வதித்துள்ளீர்கள் அதற்காக உமக்கு கோடான கோடி நன்றி . உம்முடைய கிருபையின் கரங்களினால் அடியேனுடைய எல்லா காரியங்களையும் தொட்டதற்காக பிரத்தியேகமாக உமக்கு நன்றி. இருப்பினும், அன்பான பிதாவே , உமக்கு எவ்வாறு ஊழியம் செய்ய நீர் அடியேனுக்கு என்ன வரங்களை அளித்தீர் என்பதை இன்னும் தெளிவாகக் காண உம்முடைய உதவி எனக்குத் தேவை, மேலும் அந்த ஊழியத்தை ஒவ்வொரு நாளும் என் வாழ்வில் முக்கிய முன்னுரிமையாகக் கொண்டு அவைகளை செய்ய பெலன் தாரும் . எப்போதும் என் விண்ணப்பங்களுக்கு நீர் செவிசாய்த்தற்காக உமக்கு நன்றி. இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தினால் , நான் இதைக் கேட்கிறேன். ஆமென்.