இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நல்லொழுக்கம் மற்றும் பரிசுத்தத்திற்கான தேவைகள் தற்காலிகமானவை அல்லது விரைவானவைகளும் அல்ல, ஏனென்றால் அவை நித்தியமான நமது பரிசுத்த தேவனின் தன்மையை பிரதிபலிக்கின்றன. மேலே சொன்ன குணாதிசயங்கள் கலாச்சாரத்தின் விருப்பங்களுடன் சேர்ந்து மாறுவதில்லை, ஆனால் கலாச்சாரத்திலும் , காலங்களிலும், விருப்பங்களிலும் அவைகள் (நல்லொழுக்கமும் , பரிசுத்தமும் ) முழுவதும் மெய்யாக இருக்கின்றன. நாம் தேவனின் விருப்பத்தை நம் காலத்திற்கேற்ப மாற்றியமைக்கலாகாது , ஆனால் அவருடைய சத்தியத்திற்கு ஏற்ப நம் விருப்பங்களை மாற்றியமைப்பதன் மூலமாய் நாம் நம்முடைய காலத்தை மீட்டெடுக்கிறோம்.

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையும் ,நீதியுமுள்ள தேவனே , மனதுருக்கம், பரிசுத்தம் மற்றும் நீதி ஆகியவற்றில் உம்முடைய குணத்தையும் இயல்பையும் என் வாழ்க்கை பிரதிபலிக்கட்டும். நீர் நித்தியக்காலமாய் இருப்பீர் என்பதை நான் அறிவேன், மேலும் நான் அந்த நித்ய வாழ்க்கையை பெற்றுக்கொள்ளத்தக்கதாய் இப்பொழுது என்னை ஒப்புக்கொடுத்து ஜீவிக்க விரும்புகிறேன். இன்றைய துரிதமான சோதனைகளை தாண்டி , இந்த வாழ்கைக்கு பிற்பாடும் உம்மை மகிமைப்படுத்த கூடிய விஷயங்களை கண்டு அவைகளை செய்யவும் எனக்கு ஞானத்தைத் தந்தருளும். இயேசுவின் நாமத்தினாலே . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து