இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தீமையாலும் அநியாயத்தாலும் நாம் வேதனைப்படும்போது இயேசு நம்மைப் குறித்து எப்படி உணருகிறார்? நாம் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது அல்லது பிரச்சினைகள் இருக்கும்போது நம் நொறுங்கின சரீரத்தை தொட அவர் மெய்யாகவே விருப்பம் கொள்ளுகிறாரா ? முதலாவதாக, அந்தி சாயங்கால வேளையில் இயேசு தீண்டத்தகாதவர்களைத் தொடுவதைப் பார்க்கும்போது, ​​நமக்குத் தெரியும்! இரண்டாவதாக, நாம் சிலுவையை நோக்கிப் பார்க்கும்போது, ​​இயேசு வேதனையில் இருப்பதைக் காணும்போது, ​​நம்முடைய வலி, மரணம் மற்றும் அவமானத்தை அவர் அறிந்திருக்கிறார், அக்கறை காட்டுகிறார் என்று நாம் உறுதியாக நம்பலாம். நாம் மூன்றாவதாக பார்க்க மாற்றொரு இடமும் உள்ளது: நாம் அவரைப் பார்க்கும்போது எதிர்காலம், அவர் நம் கண்களில் இருந்து வழியும் கண்ணீரையும் தொட்டு துடைத்து, துக்கத்தையும் மரணத்தையும் என்றென்றும் முடிவுக்குக் கொண்டுவருகிறார். அப்போது நாம் அவருடைய மகிமையிலும் சந்தோஷத்திலும் என்றென்றுமாய் பங்கு கொள்ளுவோம் . மாம்ச சரீரத்திலே இப்பூமியில் நாம் வாழும்போது இயேசுவின் கிருபையை நம்புகிறோம், ஆனால் அது ஒரு சிறிய பகுதிகளாகவும்,துண்டுகளாகவும் மட்டுமே நமக்கு தெரியும். இருப்பினும், நாம் அதை முழுமையாக ஒரு நாள் அறிந்து, அழிந்து போகாத சரீரத்தில் இயேசுவின் நித்தியமான சுகப்படுத்துதலையும் விடுதலையையும் அனுபவிக்கும் நாள் சீக்கிரமாய் வரும் (1 கொரிந்தியர் 13:9-12; 1 கொரிந்தியர் 15:35-58).

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும் நீதியுமுள்ள பிதாவே, உமது மேலான கிருபையின் நாளை பெற்று, உணர்ந்து அனுபவிக்கும் வரை, இவ்வுலகத்திலே உமது அன்பும் இரக்கமும் என் இரட்சகராகிய இயேசுவின் கிருபையின் மூலம் என்னைத் தாங்கும் என்று நம்புகிறேன். நசரேனாகிய இயேசுவின் நாமத்தை முழுமையாக விசுவாசித்து,ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து