இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
நான் எப்போதும் சங்கீதத்தை நேசிக்கிறேன். இன்றுவரை, பாடலானது என்னுடைய ஒரு இருதயத்தின் பகுதியை திறந்து தேவனுக்கு ஒப்புக்கொடுக்க உதவுகின்றது . அவர் மீதான எனது அன்பையும், எனது துதிகளையும் அவருக்கு தெரிவிக்க இது எனக்கு உதவுகிறது. ஆனால் சங்கீதக்காரன் சொல்வது போல், அவருடைய பாடல் இராக்காலங்களில் என்னுடன் இருக்கும், குறிப்பாக நித்திரை வர கடினமாக இருக்கும் அந்த இராக்காலங்களிலே என்னுடனே இருக்கும் . இரவில் நான் என்ன கனவு கண்டேன் என்பதை என்னால் நினைவில் கொள்ள முடியாதபோதும், அநேக வேளைகளில் நடு இரவிலே விழித்து தேவனை துதிக்கும் போதும் என் மீதும், என்னோடும், - "இராக்காலத்திலே அவரைத் துதித்து பாடும் பாட்டு என் வாயிலிருக்கிறது—என் ஜீவனுடைய தேவனை நோக்கி விண்ணப்பஞ்செய்கிறேன் ... ஆண்டவர் அவருடைய கிருபையைக் கட்டளையிடுகிறார்"
என்னுடைய ஜெபம்
என் ஜீவனுடைய தேவனே , நீர் அருளின சங்கீதத்திற்காகவும், கீர்த்தனைகளுக்காகவும் உமக்கு நன்றி. மகிழ்ச்சியுடன் பாடுவதற்கு அநேக நல்ல விஷயங்களை என் வாழ்வில் வழங்கியதற்காகவும் உமக்கு நன்றி. அடியேன் துதித்து பாடும்பொழுது என் வார்த்தைகள் மற்றும் பாடலின் நல்ல ராகங்கள் மட்டுமல்ல, என் இருதயத்தையும் நீர் கேட்டதற்காகவும் இருக்கிறீர் அதற்காகவும் உமக்கு நன்றி. அன்புள்ள பிதாவே , பரலோகத்தில் தூதர்கள் பாடுவதைக் கேட்கும் நாளுக்காக நான் ஏங்குகிறேன், மேலும் உம்முடைய சிங்காசனத்தை சுற்றி நான் பரலோகத்தில் உள்ள யாவரோடும் சேர்ந்து துதிக்கும்படி வேண்டுகிறேன் . அதுவரை உம்முடைய சங்கீதங்களால் என் வாழ்வை நிரப்பியருளும் . இயேசுவின் நாமத்தின் மூலமாய் நான் அதைக் கேட்கிறேன். ஆமென்.