இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

"என் இயேசுவை நேசிப்பீர்களானால் எப்பொழுதும் எந்த நிலைமையிலும் அவரை ஸ்தோத்திரியுங்கள் ..." என்பது நம் பிள்ளைகள் விரும்பிப் பாடும் பாடல்! ஆனால் நாட்கள் கடந்து செல்லும் போது அந்த வாலிபத்தின் குதூகலமும் தேவனை துதிக்கும் மகிழ்ச்சியும் என்னவாகிறது ? அந்த தொழுதுக் கொள்ளும் ஆர்வத்திலே தொய்ந்து போகக்கூடாது என்று தேவன் விரும்புகிறார் என்பதை வேதாகமம் சுட்டி காட்டுகிறது. வேதாகமத்தை அனுதினமும் வாசித்து , நம் அற்புதமான மற்றும் நித்திய தேவனை துதிப்பதற்கும் போற்றுவதற்கும் பயன்படுத்தப்படும் அனைத்து விதமான சரீர முயற்சிகளையும் முன்னிலைப்படுத்தவேண்டும் . இது ஆச்சரியமாக இருக்கிறது! எப்பொழுதும் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்கும் உலகிலே , நாம் எப்பொழுதும் எழுந்து நின்று தேவனைத் துதிக்கும் நேரம் இதுவல்லவா - சபையிலும், நமது அன்றாட ஜெபங்களிலும் மட்டுமல்ல, நம் வாழ்விலும் ஒவ்வொரு நாளும் துதிக்கிறோமா ?! நம்மை நாமே சோதித்தறிவோம்.

என்னுடைய ஜெபம்

பரலோகத்திலிருக்கும் பிதாவே , நித்தியமான மற்றும் வல்லமையுள்ள தேவனே, நீர் என் ஜெபங்களைக் கேட்க ஆயத்தமாய் இருக்கிறீர் என்பது எனக்கு ஆச்சரியமாய் இருக்கிறது . ஆயினும் நீர் அவற்றைக் கேட்பது மாத்திரமல்ல , நீர் அவைகளுக்கு பதிலளிப்பீர் என்பதையும் நான் அறிவேன். அதற்காக உமக்கு மிக்க நன்றி! சபையில் மற்ற கிறிஸ்தவர்களுடன் தனிப்பட்ட முறையில், எனது தினசரி தனிப்பட்ட ஜெபங்களில் அல்லது எனது பொது ஜெபங்களில் , ​​நான் என் சக ஊழியர்களுக்கு முன் மாதிரியாக வாழ்வதினாலும் , எனது ஜெபங்களின் மூலமாய் நீர் நித்தமும் போற்றப்படவேண்டும் . நீர் ஒருவரே தேவனானவர் மற்றும் எல்லா துதிக்கும் ஸ்தோத்திரத்துக்கும் தகுதியானவர், எனவே தயவுக்கூர்ந்து என் வாழ்க்கையின் மூலமாய் நீர் மகிமையடைவீராக . இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து