இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
தேவனே சிருஷ்டிகர் ! வாழ்க்கை அவருக்குள்ளாகவும் அவராலும் வரையறுக்கப்படுகிறது. வானத்தின் திரளான தூதர்கள் தேவனின் சிருஷ்டிப்பின் வல்லமை மற்றும் அன்பிற்காக அவரை தொழுதுக்கொள்ளுகிறார்கள் . என்னைப் பொறுத்தவரை, மேலே சொன்ன காரியங்கள் இரண்டு மிக முக்கியமான விஷயங்களைக் குறிக்கிறது. 1. அவருக்கு எப்பொழுதும் எனது மனமார்ந்த துதிகளையும் ஸ்தோத்திரத்தையும் கொடுக்க வேண்டும். 2. நான் தேவனைத் துதிக்கும்போது, நான் நித்தியமான ஒன்றைச் செய்து, தேவனை ஆராதிப்பதில் வானத்தின் சேனையுடன் இணைகிறேன்! நீங்களும் நானும் இந்த வாழ்க்கையிலிருந்து அடுத்த வாழ்க்கைக்கு அநேக காரியங்களை எடுத்து செல்லமாட்டோம், ஆனால் அவற்றில் ஒன்று நம் பிதாவாகிய தேவனுக்கும் துதி மாத்திரமே . தேவனுக்கு இப்போது மட்டுமல்ல, என்றென்றும் துதி உண்டாவதாக !
என்னுடைய ஜெபம்
அன்பான தேவனே இந்த அண்ட சராசரங்களையும் அதன் புரிந்துகொள்ள முடியாத பரப்பில் நீர் உருவாக்கியதற்காக உமக்கு நன்றி. பரிசுத்த பிதாவே, கிறிஸ்துவுக்குள் என்னை மீண்டும் உருவாக்கியதற்காக உமக்கு நன்றி, அதனால் உமது அன்பான பிள்ளையாக உமது மகிமையில் நான் பங்குகொள்ள முடியும். எல்லாம் வல்ல தேவனே , என்றும் நிலைத்து நிற்கும் வாழ்வை உருவாக்கியதற்காக நன்றி. நான் உம்மை முகமுகமாய் பார்த்து, வானத்தின் திரளான சேனைகளோடு உம்மை துதிக்கும் அந்த நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இயேசுவின் நாமத்தினாலே துதித்து ஜெபிக்கிறேன் . ஆமென்.