இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
இந்த சூழ்நிலையில் இயேசு தம் சீஷர்களின் கவனத்தை ஈர்த்த விதம் எனக்கு மிகவும் பிடித்த பகுதியாகும் . "நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் கிரியை செய்கிறவர் " அவர்களுக்கு அவர் சவால் விடுத்தார் (எபேசியர் 3:20-21). அடிப்படையில், இயேசு அவர்களிடம், "நீங்கள் போய் அவர்களுக்கு உணவளியுங்கள் , சீஷர்களே என்று கூறினார் !" நிச்சயமாக, அவர்களால் அது முடியாது என்று அவர்களுக்குத் நன்றாய் தெரியும்! ஆயினும்கூட, அவர்கள் தங்களிடம் உள்ள சொற்பமான காரியத்தை அவரிடம் (இயேசுவிடம்) கொண்டுவந்தால், அவரால் ஆச்சரியமான காரியங்களைச் செய்ய முடியும் என்று இயேசு அவர்களுக்குக் நிரூபித்து காண்பித்தார் . அந்த பெரிய விருந்து முடிந்ததும், அந்த கொஞ்சமான சீஷர்கள் ஒவ்வொருவரும் இயேசுவின் கிருபையின் மேசையிலிருந்து கூடை நிறைய எஞ்சியவற்றை எடுத்தார்கள் (லூக்கா 9:17). நம்முடைய சவால் நம் கண்களுக்கு முன்பாக இருக்கும் குறைந்த வளங்கள் என்பதை நினைவில் கொள்வோம், ஆனால் நம்மிடம் இருக்கும் கொஞ்சத்தை இயேசுவிடம் கொண்டு வர விருப்பமில்லாமல் இருப்பதாகும் , ஆனால் அவர் நம்முடன் ஏதாவது செய்வார் என்று நம்புவோம், அந்த வளங்களை கொண்டு , நாம் நினைத்து பார்க்க முடியாத வழிகளில் நம்மையும், மற்றவர்களையும் ஆசீர்வதிப்பார்!
என்னுடைய ஜெபம்
அப்பா பிதாவே , தேவைப்படும் காலங்களில் உம்முடைய அளவற்ற உதவிக்காகவும் கிருபைக்காகவும் , தேவைப்படும் காலங்களில் உம் அன்பான மற்றும் தாராளமான வஸ்துக்களுக்காகவும், இன்னுமாய் நான் உமது சித்தத்தை செய்ய முற்படும் போது, எனது கொஞ்சமான வளங்களை வியக்கத்தக்க வகையிலும் மற்றும் உற்சாகமாகவும் பயன்படுத்தியதற்காக உமக்கே எல்லா துதியும் கனமும் வல்லமையும் மாட்சிமையும் உண்டாயிருப்பதாக . மற்றவர்களை ஆசீர்வதிப்பதற்காக நான் ஊழியம் செய்யும்படி நீர் என்னை அழைத்து ஒப்படைத்த வேலையை நான் செய்து முடிக்க வேண்டுமென்பதை நான் அறிவேன். பிதாவே , நான் வாழும் இவ்வுலகில் உம் சித்தத்தை செய்வதற்கு கொஞ்சமான மற்றும் அற்ப வளங்கள் என்று நான் நினைக்கும் அவைகள் உமக்கு போது என்பதை விசுவாசிக்காமல் இருந்த தருணங்களுக்காக என்னை மன்னித்தருளும் ! இயேசுவின் நாமத்தில், உமது கிருபையை முழு நம்பிக்கையோடும், உம்முடைய அளவற்ற ஆசீர்வாதத்திற்காக நன்றி செலுத்தி ஜெபிக்கிறேன். ஆமென்.