இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவனுடைய அளவற்ற இரக்கமும் கிருபையுமே நம்மை பரிசுத்தத்திற்கு உற்சாகப்படுத்துகிறது. இயேசுவை ஜீவபலியாக கொடுத்ததின் மூலம் அவர் ஏற்கனவே தனது அன்பை நமக்கு வெளிப்படுத்தியிருப்பதால், நாம் அவருக்கு நம்மை ஒப்புக்கொடுக்கிறோம். அவரை கனப்படுத்த நம்மை ஒப்புக்கொடுக்கும்போது, நாம் அவரை தொழுதுகொள்ளுகிறோம். இந்த உலகத்திற்குரிய வாழ்க்கை முறைக்கு நம்மை உட்படுத்திக்கொள்ள மறுக்கும்போது, நாம் தேவனை துதிக்கிறோம். இவற்றை நாம் தொடர்ந்து நம் வாழ்வில் செய்யும்போது, ​​தேவனின் சித்தம் இன்னும் நமக்கு தெளிவாகிறது. ஆவியானவர் ஒத்தாசையுடன் , நாம் தினமும் இயேசுவைப் போல் மறுரூபமாகிறோம் (2கொரி 3:18), நாம் தேவனின் குணாதிசயத்தை அதிகமாக வெளிப்படுத்துகிறோம் ( கலாத்தியர் 5:22, 23).

என்னுடைய ஜெபம்

பிதாவே, பழைய பாடல் வரிகள் இப்படியாய் சொல்லுகிறது " உம் சொந்த பாதையை கொண்டிருங்கள் ஆண்டவரே .... உம் சித்தத்திற்கு என்னை வனைந்துக் கொள்ளும்". மகிழ்ச்சியுடனே என் இருதயத்தையும், வாழ்க்கையையும், எதிர்காலத்தையும் உம்முடைய மகிமைக்காக ஒப்புக்கொடுக்கிறேன். இயேசுவின் நாமத்திலே வேண்டிக்கொள்ளுகிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து