இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
"சபைக்கு செல்வது" என்பது பலருக்கு மிகவும் கவர்ச்சிகரமான வாக்கியம் அல்ல. இந்த உண்மை நம்மை ஆச்சரியப்படுத்தக்கூடாது. ஒழுக்கத்தின் ஒரு செயலாக விஷயங்களைச் செய்வது என்பது மிகவும் பிரபலமாக இல்லை மற்றும் பெரும்பாலும் எளிதானதும் அல்ல. கூடுதலாக, மற்றவர்களுக்காகச் நன்மை செய்வது நம் இருதயங்களை எப்போதும் மகிழ்ச்சியால் நிரப்பாது - ஆனால் அது அப்படியாக தான் இருக்க வேண்டும் . இந்த உண்மைக்கு மேல் மற்றொரு ஆவிக்குரிய உண்மை உள்ளது, அது இன்னும் முக்கியமானதாக இருக்கலாம்: "சபைக்கு செல்வது" என்பது வேதத்தில் எங்கும் காணப்படாத ஒரு கருத்து - சபை என்பது நாம் செல்லும் இடம் அல்ல, ஆனால் நாமே சபையாய் இருக்கிற ஒன்றாகும் ! தேவனுடைய மக்களுடன் நாம் இருக்க வேண்டும் என்பதை இந்த நாளின் வசனத்தில் உள்ள பரிசுத்த ஆவியின் செய்தி நமக்கு நினைப்பூட்டுகிறது, ஏனென்றால் அவர்களை உற்சாகப்படுத்தவும் , ஆசீர்வதிக்கவும், ஊக்குவிக்கவும் அவர்களுக்கு நாம் தேவை! சபை என்பது இயேசுவின் சீஷர்கள் அவரைக் கனம்பண்ணவும் ஒருவரையொருவர் ஆசீர்வதிப்பதற்கும் கூடிய ஒரு கூட்டமாகும் . அவரை தொழுதுக்கொள்ளுவதற்கு நாம் நிரப்பும் ஒரு கட்டிடம் அல்ல, ஒன்று சேர்வதை விட, ஊக்கம், ஆறுதல் மற்றும் அறிவுரைகளை கொடுக்கும் இடம் சபை என்று நினைப்பதையே கர்த்தர் விரும்புவார். ஆனால் இந்த உண்மையை தவறாக சித்தரிக்காதீர்கள். பரிசுத்த ஆவியானவர் நாம் ஒன்று கூடுவதை தவிர்க்கலாம் என்று கூறவில்லை. அவர் எதிர் கட்டளையிடுகிறார். "கூடுங்கள்! ஒன்றாக சந்திப்பதை விட்டுவிடாதீர்கள்" என்று ஆவியானவர் இங்கு நமக்கு கட்டளையிடுகிறார். நாம் அடிக்கடி சந்திக்கும் போது ஒன்றாக கூடி, ஒருவரையொருவர் ஆசீர்வதிப்பதைப் போல, நாம் எங்கு சந்திக்கிறோம் என்பது கிட்டத்தட்ட முக்கியமல்ல. இயேசுவின் வருகை இன்னும் நெருங்கி வரும்போது அவருக்காக வாழ நம் ஒவ்வொருவருக்கும் ஊக்கம் தேவை!
என்னுடைய ஜெபம்
பிதாவே , நான் தவறாமல் சந்திக்கும் கிறிஸ்தவர்களின் ஐக்கியத்தை ஆசீர்வதியுங்கள். நாங்கள் நடக்கும்போது என் வார்த்தைகள், அணுகுமுறை மற்றும் கிரியைகளின் மூலம் அவர்களை ஆசீர்வதியுங்கள், உம்மை கனப்படுத்த ஒருவரையொருவர் ஊக்குவிக்கவும். உம்முடைய சீஷர்களை ஆசீர்வதிக்க என்னைத் உற்சாகப்படுத்தும் , இன்னுமாய் இயேசுவின் வருகைக்காக நாங்கள் காத்திருக்கையில் அந்தமட்டும் அவர்கள் உமக்காக வாழ அவர்களை உற்சாகப்படுத்த என்னை வழிநடத்தும் . இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.