இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பழைய ஏற்பாட்டில் தேவன் தம்முடைய மக்களுடன் பயன்படுத்திய துரிதமான மற்றும் வியத்தகு ஒழுக்கம் மற்றும் தண்டனையை நாம் அநேக வேளைகளில் பார்க்கிறோம். இது உண்மையாக இருந்தாலும், கிருபையை நிராகரிப்பதும், இயேசுவின் தியாக மரணத்தை கேலி செய்வதும் தேவனின் தண்டனைக்கு மிகவும் தகுதியான செயல்கள் என்பதை பரிசுத்த ஆவியானவர் நமக்கு நினைவூட்டுகிறார். கிருபை மிகவும் ஆச்சரியமானது . இது அற்புதம். ஆனால் இயேசுவையும் நிராகரிப்பதும் மற்றும் தேவனின் அன்பையும் இரட்சிப்பையும் நமக்குக் கொண்டுவர அவர் செய்த அனைத்தையும் நிராகரிப்பது நமக்கு மிகவும் மோசமான விளைவை உண்டுபண்ணும் , இன்னுமாய் கிருபையின் எந்த ஆதாரத்தையும் நிராகரிப்பதும் ஆகும். இயேசுவை நிராகரிப்பது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும், எனவே அன்பான நண்பரே, வேண்டாம்! அன்பு, கிருபை , இரக்கம் , நம்பிக்கை மற்றும் இரட்சிப்பு ஆகியவற்றை தேவன் கொடுக்கும் சலுகையை தயவுசெய்து நிராகரிக்காதீர்கள். பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு அப்போஸ்தலனாகிய பேதுரு கூறியது போல்: அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்றான். (அப்போஸ்தலர் 4:12)

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும் நீதியுமுள்ள பிதாவே, உம்முடைய வலி நிறைந்த மற்றும் விலையுயர்ந்த கிருபைக்காக நன்றி. மற்றவர்களுக்கு அந்த கிருபையை பிரசங்கிப்பவராகவும் , பகிர்ந்தளிப்பவராகவும் இருக்க எனக்கு அதிகாரம் கொடுங்கள். தயவு செய்து, இயேசுவின் நற்செய்தியை அதன் அனைத்து மேன்மையிலும் பகிர்ந்து கொள்ளும் திறனை எனக்கு ஆசீர்வாதமாய் தாரும் , அதனால் மற்றவர்கள் உம்முடைய விலையேறப்பெற்ற இரட்சிப்பை அறிந்து கொள்ள முடியும், மேலும் உம் கிருபையை இயேசுவுக்குள் பெற்ற பிறகு உம் நீதியை எதிர்கொள்ள வேண்டியதில்லை, அவருடைய நாமத்தினாலே ஜெபித்து , மன்றாடுகிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து