இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பயபக்தியுடன் தொழுதுக்கொள்ள வேண்டிய பரிசுத்த மற்றும் சர்வவல்லமையுள்ள தேவனாகவும் , அவருடைய அன்பான பிள்ளையாக நாம் அணுகும் எங்கள் அப்பா பிதாவாகவும் நம் ஆண்டவராகவும் அணுகுகிறோம். நீண்ட, அலங்காரமான மற்றும் உயர்ந்த ஜெபங்கள் தேவைப்படுவதற்குப் பதிலாக, நம் வாழ்வின் மிக அடிப்படையான அன்றாட பிரச்சினைகள் மற்றும் தேவைகளைப் பற்றி அவருடன் பேச வேண்டும் என்று தேவனானவர் விரும்புகிறார். இன்னுமாய் அவருடைய சித்தத்தின்படி கேட்போம் என்றால் நம்மை ஆசீர்வதிக்க விருப்பமுள்ளவராய் இருக்கிறார் .

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பிதாவே , எப்போதும் அருகிலே இருக்கும் ஒரு பரிசுத்த தேவனாக இருப்பதற்காக உமக்கு கோடான கோடி நன்றி. தயவு செய்து உமது விருப்பத்தை என் வாழ்வில் செய்து உமது மகிமைக்காக என்னை எடுத்து பயன்படுத்தியருளும் . எனக்கு எதிராக பாவம் செய்தவர்களை நான் மன்னிக்கும் பணியில் ஈடுபடும்போது என்னையும் மன்னித்தருளும் . என்னுடைய அன்றாடத் தேவைகளை நீர் என் வாழ்க்கையில் ஆசீர்வதிப்பீர் என்பதை நான் அறிவேன். அன்பான பிதாவே, இயேசுவின் நாமத்தில் நான் உம்மிடம் கிட்டி சேர்கிறேன் , நீர் எங்களை நேசிக்கிறீர், உமது சித்தத்தின்படி எங்களுக்குச் சிறந்ததைச் செய்வீர் என்ற நம்பிக்கையாய் இருக்கிறேன், இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து