இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
இது எல்லாம் எங்கிருந்து வந்தது? பொருள், ஆற்றல், ஒழுங்கு, அழகு, தனித்தன்மை, பன்முகத்தன்மை மற்றும் காலம் எங்கிருந்து வந்தன? நாம் பார்க்கிற இவ்வுலகம் பற்றி நாம் அறிந்த அனைத்தும் அழிவு , ஒழுங்கின்மை மற்றும் மரணம் போன்ற காரியத்தை நோக்கி நகர்ந்து செல்கிறது போது நமது பிரபஞ்சம் எவ்வாறு சிக்கலான தன்மையையும் கட்டமைப்பையும் பெற்றுள்ளது? விசுவாசத்தின் மூலம், அது நமது பரலோகத் பிதாவின் தெளிவான வடிவமைப்பிலிருந்து வந்தது என்பதை நாம் அறிவோம்! குழப்பமமும் ஒன்றுமில்லாமல் இருந்ததிலிருந்து , தேவன் எல்லா படைப்புகளையும் உருவாக்கினார்.
என்னுடைய ஜெபம்
அன்புள்ள ஆண்டவரே, நீங்கள் உருவாக்கிய நம்பமுடியாத உலகத்திற்காக நாங்கள் உமக்கு நன்றி கூறுகிறோம். எங்கள் உலகத்தை நிர்வகிக்கும் ஒழுங்கு கொள்கைகளுக்காக நன்றி மற்றும் அதைப் புரிந்துகொள்ள எங்களுக்கு ஞானத்தை தாரும் . எங்களைத் தாழ்த்துகிற நுணுக்கங்களுக்காகவும்,அழகுக்காகவும் உமக்கு நன்றி. உம் பரந்த மற்றும் பிரமிக்க வைக்கும் படைப்பின் பல்வேறு மகிமையினால் எங்கள் இருதயம் பூரிப்படைகிறது . நீர் உண்டாக்கினதை வியப்புடன் பார்க்கும்போது நாங்கள் உம்மை புகழ்ந்து நன்றி கூறுகிறோம். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன்,ஆமென்.