இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
இயேசு நம்மை மீட்கும்படி வந்தார்! ஏன்? ஏனென்றால், நாம் வாழும் காலங்கள் எளிதானவை அல்ல என்பது அவருக்கு நன்றாய் தெரியும். நாம் வாழும் உலகம் அக்கிரமத்தில் நிறைந்திருக்கிறது என்பதை அவர் அறிந்திருக்கிறார். நமது உலகம் உடைந்து அழிந்துக்கிடக்கிறது என்று அவர் அறிவார். இருப்பினும், இவை மாத்திரமே இவ்வுலகில் நாம் எதிர்கொள்ளும் உண்மையான காரியங்கள் அல்ல. இயேசு தம் சிலுவையின் மூலம் பாவம், மரணம், சாத்தான் மற்றும் நரகத்தின் மீது நமக்கு மாபெரும் வெற்றியைக் கொடுத்தார் (கொலோசெயர் 2:12-15). இப்போது, நாம் ஒவ்வொரு நாளையும் ஒருவரையொருவர் கிருபையுடன் வாழ்த்தலாம் மற்றும் நம்பிக்கையான சமாதானத்துடன் எதிர்காலத்தை எதிர்கொள்ளலாம், நம்முடைய கர்த்தர் சமீபமாயிருக்கிறார், நம்முடைய இரட்சிப்பு உறுதியானது (பிலிப்பியர் 4:5; யாக்கோபு 5:8; லூக்கா 21:28).
என்னுடைய ஜெபம்
பிதாவே , நான் தினமும் உமக்காக வாழ முற்படுகையில், நன்மை மற்றும் தீமையான காரியங்களை வேறுபடுத்திப் பார்க்க எனக்கு உதவுங்கள். சாத்தான் பல வழிகளில் அதை கவர்ச்சியாகவும் காட்ட முயற்சித்தாலும் தீமையை அடியேன் வெறுத்து தள்ள எனக்கு ஞானத்தை தாரும் . நான் பாவியாக இருந்தபோதும் என்னை நானே காப்பாற்றிக்கொள்ள முடியாமல் போனபோதும் என்னை இரட்சிக்க இயேசுவானவரை அனுப்பியதற்காக உமக்கு . உம் கிருபையை எனக்கு பகிர்ந்து அதனால் என் வாழ்க்கையில் அமைதி அளித்ததற்காக உமக்கு நன்றி. உமது மகிமையில் அடியேனையும் பங்கு கொள்ள அழைத்துச் சென்றதற்காக உமக்கு ஸ்தோத்திரம் . ஆசீர்வதிக்கப்பட்ட பரிசுத்த ஆவியின் மூலமாய் , நான் எனது நன்றியையும் ஸ்தோத்திரத்தையும் ஒப்புவிக்கிறேன். ஆமென்.