இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
சில சமயங்களில், "நாம் அதிக மேட்டிமையாக " இருக்கும்போது, இயற்கை பேரழிவு, உலகப் போர், குணப்படுத்த முடியாத நோய், பொருளாதார மந்தநிலை அல்லது பரவலான சமூக சீர்கேடு ஆகியவற்றால் நாம் தாழ்த்தப்படுகிறோம். வரவிருக்கும் நமது சொந்த வீழ்ச்சியை முன்னறிவிப்பவராக நமது வீறாப்பு செயல்படுகிறது. நாம் ஜீவிக்கிற இவ்வுலகில் ஒரு பொதுவான கொள்கை நடைமுறையில் இருக்கிறதா ? ("மேட்டிமைக்கு முன்னானது தாழ்மை .") இது தேவனின் செயலில் உள்ள சிட்சையா ? ("தேவன் தான் நேசிப்பவர்களை சிட்சிக்கிறார் .") இரண்டு கேள்விகளுக்கும் பதில் "ஆம்! . நம் வாழ்க்கையைப் பற்றி நம்மால் கட்டுப்படுத்த முடியாத பல விஷயங்கள் உள்ளன என்பதை தேவனும் அவருடைய உலகமும் நமக்கு நினைவூட்டுகின்றன. இந்த வசனம் பொதுவான கொள்கைகளுக்கு அப்பாற்பட்டது மற்றும் மனித ஆணவம் அகற்றப்படும் மற்றும் அனைத்து பொய்யான விக்கிரகங்களும் ஒழிந்துவிடும் ஒரு இறுதி நாளை உறுதியளிக்கிறது. அந்நாளில் தேவனின் பிள்ளைகள் மகிழ்ந்து களிகூறுவார்கள்! அதுவரை, நம் தேவனுடன் பணிவுடன் நடந்து, இயேசு திரும்பி வரும் நாளை எதிர்ப்பார்ப்போம், வீறாப்பு வீழ்த்தப்பட்டு, தாழ்மைக்காக மேட்டிமை மாற்றப்படுகிறது. ஆஹா , அது எவ்வளவு ஒரு மகிமையான நாளாக இருக்கும்!
என்னுடைய ஜெபம்
பரலோகத்திலுள்ள அன்பான பிதாவே, தயவுசெய்து எனக்கு சாந்தமாய் தாழ்மையை போதித்தருளும் . நான் மிகவும் அதிக ஐசுவரியவான் ஆவதின் மூலம் உம்முடைய நிலையான பிரசன்னத்தைப் பற்றிய எனது விழிப்புணர்வை இழக்க விரும்பவில்லை. என்னுடைய ஆணவத்தால் என்மீதோ அல்லது நான் விரும்புகிறவர்களுக்கோ பேரழிவை ஏற்படுத்த விரும்பவில்லை. அன்பான பிதாவே , நீர் அளித்த உம் கிருபைக்காக , இரக்கத்திற்காக , அன்புக்காக, உம்மை போற்றி பாராட்டக்கூடிய ஒருமித்த மற்றும் அர்ப்பணித்த இருதயத்தை எண்ணிலே உண்டாக்கும் . கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.