இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
இந்த கூற்றின்படி , விசுவாசிகள் என்று கூறிக்கொள்ளும் பலர் ஆவிக்குரிய பிரகாரமாக பிணங்களை போல இருக்கிறார்கள் என்று நான் அஞ்சுகிறேன். நம்முடைய விசுவாசம் உண்மையானதாக இருக்குமானால் , அது நற்கிரியைகளினால் தன்னை வெளிப்படுத்த வேண்டும் என்று யாக்கோபு ஆசிரியர் கூறுகிறார். இயேசு தனது மலைப் பிரசங்கத்தில் (மத்தேயு 7:21) இதே போன்ற கருத்து ஒன்றைக் கூறினார். விசுவாசம் மலைகளை நகர்த்துவது மட்டுமல்லாமல், தேவனை கனப்படுத்தும் மற்றும் மற்றவர்களை ஆசீர்வதிக்கும் வழிகளில் செயல்பட விசுவாசிகளை தூண்ட வேண்டும். தேவனின் அற்புதமான கிருபைக்காக அவருக்கு நன்றியை வெளிப்படுத்தும் ஒரு மெய்யான விசுவாசியின் வழியாக அந்த விசுவாசமும் மாறுகிறது.
என்னுடைய ஜெபம்
பரிசுத்தமும் உண்மையுமுள்ள பிதாவே, என் நம்பிக்கை நற்காரியங்களை செய்யத் தூண்டாதபோது, என் ஆவிக்குரிய நடக்கையில் நான் சோம்பல் உள்ளவனாக இருந்த வேளைகளுக்காக அடியேனை மன்னியுங்கள். ஒவ்வொரு நாளும் நீர் எனக்கு ஊழியம் செய்யும்படியான அநேக வாய்ப்புகளைப் பார்க்க என் கண்களை திறந்தருளும் , மற்றவர்களை ஆசீர்வதித்து உம்மைக் மகிமைப்படுத்தும் வகையில் அந்த வாய்ப்புகளை சரியான முறையில் செயல்படுத்த எனக்கு அதிகாரம் தாரும் . இயேசுவின் பரிசுத்த நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.