இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

உங்களை குறித்து எனக்குத் தெரியாது, ஆனால் என் வாழ்க்கையில் நான் அனுமதித்த எல்லா வசதிகளாலும் நான் பெலமில்லாதவனாகவும் நல்ல பழக்கமில்லாதவனாகவும் வளர்ந்திருக்கிறேன் என்பது எனக்கு நன்றாய் தெரியும். இந்த வசதிகள் திடீரென மறைந்து போனால் , அப்பொழுது ஒருவேளை நான் தேவனை எனது துதிகளாலும் நன்றியறிதலாலும் நான் கனப்படுத்த முடியுமா? அப்படியென்று நான் முழுநிச்சயமாய் நம்புகிறேன். அவ்வாறு செய்வதில் நான் மிகவும் உறுதியாய் இருக்கிறேன். நான் பவுலைப் போல இருக்க விரும்புகிறேன், கிறிஸ்துவின் உதவியால் எந்த சூழ்நிலையையும் என்னால் தாங்க முடியும் என்ற உறுதியுடன் வாழ விரும்புகிறேன்— பவுலானவர் எதிர்கொண்டது போல சிறைகாவல் ஆனாலும் சரி ஒருவேளை நண்பர்களால் கைவிடப்பட்டாலும் சரி "என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு" என்று அவர் சொன்னது போல நானும் உறுதியாய் இருக்க விரும்புகிறேன்.

Thoughts on Today's Verse...

I don't know about you, but I know I've grown soft and spoiled because of all the conveniences I have allowed into my life. If these conveniences were to vanish suddenly, could I, would I, honor God with my praises and thanksgiving? I sure hope so. I am committed to doing so. I want to be like Paul and live with the assurance that I can withstand any situation with the help of Christ Jesus — even if it is imprisonment and the abandonment of friends as Paul was facing.

என்னுடைய ஜெபம்

தேவனே , நீர் என்னோடு இல்லாமல் என் பெலம் மங்கிப்போகும், என் நம்பிக்கை தோல்வியடையும். அதிர்ஷ்டவசமாக நான் இதைப் பற்றி ஒருபோதும் கவலைப்பட வேண்டியதில்லை, ஏனென்றால் உமது கிருபையும், உமது ஆவியும், உமது குமாரனும் என்னை பெலப்படுத்தி, எந்தப் புயலையும் சமாளிக்க எனக்கு உதவுவார்கள். உமக்கு நன்றி செலுத்தி , இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன் . ஆமென்.

My Prayer...

O God, my strength would fade without you, and my confidence would fail. Thankfully, I will never have to worry about this because your grace, your Spirit, and your Son. These strengthen me and help me weather any storm. I believe you will never abandon me. Thank you, in Jesus' name. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of பிலிப்பியர்-Philippians  4:13

கருத்து