இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
நம் மனதை தேவையற்ற காரியத்திலிருந்து வெளியே எடுத்து, தேவனின் மகிமையில் நம் இதயங்களை ஒருமுகப்படுத்துவோம். இன்று நம் உலகில் நாம் காணும் பிரச்சினைகள், சிரமங்கள் மற்றும் பயங்கரமான விஷயங்களில் நம் மனதை மையப்படுத்தாமல், தேவனின் நன்மையையும், அவரைப் பற்றிய மகிமையான விஷயங்களையும் நினைவூட்டுவோம். "நாம் எதைப் பார்க்கிறோமோ அதுவாகவே மாறுகிறோம்" என்றால், நம் கவனத்தை இவற்றில் செலுத்தத் தேர்வுசெய்வோம்: ... உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள்.
என்னுடைய ஜெபம்
நீதியுள்ளவரும் பரிசுத்தமுள்ளவருமான தேவனே , நீர் அற்புதமானவரும் மகிமையுள்ளவரும், எல்லா வகையிலும் பரிபூரணருமானவர், என் புரிதலுக்கு அப்பாற்பட்டவருமாய் இருக்கிறீர் . உமது பரிசுத்த ஆவியின் வல்லமையால் எனக்குள் உமது பரிசுத்தத்தின் தன்மையை எழுப்பும். நான் சிறிய மாற்றங்களை விரும்பவில்லை, ஆனால் ஆவியின் மறுருபமாக்கும் வல்லமையினால் இயேசுவைப் போல மாற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். என் உலகத்தின் பிரிவினை, அழுக்கு மற்றும் கேடான காரியங்கள் அல்ல, உமது இயல்பைப் பிரதிபலிக்கும் நல்ல மற்றும் மகிமையான விஷயங்களைப் பார்க்கவும் கவனம் செலுத்தவும் எனக்கு உதவுங்கள். இயேசுவின் நாமத்தில், என் உலகத்தின் அர்த்தமற்ற, வீண் மற்றும் மோசமான விஷயங்களைத் தாண்டி உயர்ந்து, உம்மையும் உமது மகிமையையும் மையமாகக் கொண்டு, மற்றவர்களை உம்மிடம் கொண்டு வர உம் உதவிக்காக நான் ஜெபிக்கிறேன் . ஆமென்.


