இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவனுடன் நாம் நித்தியமாக எதில் பங்கு கொள்வோம்? தேவ மகிமையில் ! இஸ்ரவேலர் வனாந்தரத்தின் வழியாக அழைத்துச் செல்லப்படும்போது , தேவனை சந்தித்த பிறகு மோசேயின் முகத்தில் பிரதிபலித்தது எது? தேவ மகிமை. மனிதர்களாகிய நாம் முழுமையாகக் காண முடியாத அளவுக்கு அற்புதமானது எது? தேவ மகிமை. தேவனைக் கனப்படுத்த நாம் தேடும்போது நாம் என்ன செய்ய வேண்டும்? அவருக்கு உரிய மகிமையை அவருக்குக் கொடுக்க வேண்டும் . மகிமையான பாடல்களின் மூலமாக அவரைத் துதியுங்கள். யெகோவாவின் பரிசுத்த நாமத்திற்கு மகிமை செலுத்திடுங்கள் ! எனவே, அப்போஸ்தலனாகிய பவுலுடன் சேர்ந்து, தேவனைப் புகழ்ந்து இவ்வாறு கூறுவோம்: நம்முடைய பிதாவாகிய தேவனானவருக்கு என்றென்றும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

என்னுடைய ஜெபம்

அற்புதமான மற்றும் மகிமையுள்ள தேவனே , நீர் பரிசுத்தத்தில் மகத்துவமுள்ளவர், என் குறைபாடுகளில் பொறுமையுள்ளவர், என் உடைந்த தன்மையில் மென்மையானவர், உமது மகிமையில் நான் பங்கேற்பதில் உறுதியாக இருப்பவர். அன்பு, போற்றுதல், பாராட்டு மற்றும் நன்றியுடன் உமது கிருபையின் சிங்காசனத்தை நான் அணுகும்போது எனது துதியைப் ஏற்றுக்கொள்ளுங்கள் . தேவனே , இயேசுவின் நாமத்தினாலே எல்லா மகிமையும் உமக்கே செலுத்துகிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து