இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

குறிப்பாக நமக்கும் நம் விசுவாசத்திற்கும் விரோதமான சூழ்நிலைகளில், நம் விசுவாசத்தை எவ்வாறு திறம்பட பகிர்ந்து கொள்வது? முதலாவதாக, நாம் நம் இருதயங்களை கர்த்தராகிய கிறிஸ்துவுக்கு மனப்பூர்வமாக ஒப்புக்கொடுப்போம் . இரண்டாவதாக, இயேசுவுக்குள் நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையை மையமாகக் கொண்ட ஒரு விளக்கக்காட்சியை - அல்லது சூழ்நிலைகளைப் பொறுத்து பல விளக்கக்காட்சிகளை - தயார் செய்கிறோம். இறுதியாக, நாம் நம்பிக்கைக்கான காரணத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது, ​​அதை மரியாதையுடன் செய்கிறோம், மெதுவாக நம் விசுவாசத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். நிச்சயமாக, தேவனின் நன்மை, பரிசுத்தம் மற்றும் கிருபையால் நம்மைச் சுற்றியுள்ளவர்களை நன்மையான வகையில் பாதிப்பை உண்டாக்கும் விசுவாச வாழ்க்கையை நாம் வாழாவிட்டால், நம் விசுவாசத்தைப் பகிர்ந்து கொள்ள நமக்கு ஒருபோதும் வாய்ப்பு கிடைக்காது.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும் , அன்புமுள்ள பிதாவே, தயவுசெய்து என் செல்வாக்கையும் என் வாழ்க்கைத் தரத்தையும் பயன்படுத்தி மற்றவர்களை இயேசுவிடம் கொண்டு வர என்னை பயன்படுத்தும் . பின்வரும் நண்பர்களை கிறிஸ்துவிடம் வழிநடத்த நான் முயலும்போது எனக்கு ஞானத்தைத் தாரும்... (இந்த விலையேறப்பெற்ற மனிதர்களில் பலரைப் பெயர்களால் குறிப்பாகக் குறிப்பிடுங்கள்!) என் வார்த்தைகளும் செயல்களும் அவர்களை உம்மிடம் நெருங்கி வழிநடத்தட்டும், மேலும் உம் படைப்புகளாக அவர்கள் மீது நீர் வைத்திருக்கும் என் மரியாதையையும் அன்பையும் அவர்களுக்குக் காட்டட்டும். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து