இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசுவின் உயிர்த்தெழுதல் எல்லாவற்றையும் மாற்றியது! சுவிசேஷத்தின் ஆசிரியர்கள் குறிப்பிட்டது போல, "ஸ்தீரிகள் ", இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் முழுவதும் விசுவாசத்துடன் அவருடனே கூட இருந்தனர். கர்த்தருடைய பரமேறுதலுக்குப் பிறகும், அவர்கள் இன்னும் அங்கே இருந்தார்கள், ஆதி சீடர்களுடன் கீழ்ப்படிதலுடன் எதிர்பார்த்து ஜெபித்தார்கள். நாம் எதிர்பார்ப்பது போல, இயேசுவின் தாயும் அங்கே ஜெபித்துக் கொண்டிருக்கிறார். லூக்காவின் விளக்கத்தை கவனமாகப் பாருங்கள் (அப்போஸ்தலர் 1:14-16) இயேசுவின் சகோதரர்கள் கூட, ஒரு காலத்தில் அவரை சந்தேகித்து கேலி செய்து கொண்டிருந்தனர் (யோவான் 7:1-7), இப்போது தங்கள் உயிர்த்தெழுந்த சகோதரர் பரிசுத்த ஆவியின் ஊற்றுதலின் மூலம் வல்லமையினால் வெளிப்படுவார் என்று எதிர்பார்த்து ஜெபிப்பதைக் கவனியுங்கள். ஆம், அவர்கள் காத்திருந்தார்கள், ஆனால் சோம்பேறியாக காத்திருக்கவில்லை. ஆம், அவர்கள் ஜெபித்தார்கள், ஆனால் உயிர்த்தெழுந்த இயேசுவின் மகத்தான கிரியையை அவர்கள் மூலமாய் செய்வார் என்று எதிர்பார்தார்கள் ! உயிர்த்தெழுந்த இயேசுவை நேசிக்கும் மக்கள் எதிர்பார்ப்புடன் ஜெபிக்கும்போது தேவன் அற்புதமான காரியங்களைச் செய்கிறார். எனவே நீங்கள் எதற்காக காத்திருக்கிறீர்கள்? இயேசுவை நேசிப்பவர்களின் ஒரு குழுவுடன் சேர்ந்து, இயேசு உங்கள் மூலம் தனது கிரியையை நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்புடன் ஜெபிக்கவும்!

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ளவரும் சர்வ ஞானமுள்ளவருமாகிய தேவனே , மற்றவர்களும் என்னுடன் சேர்ந்து ஊக்கமான ஜெபத்தில் ஈடுபட ஊக்குவிக்கும் எனது முயற்சிகளை ஆசீர்வதியும். உமது நாமத்தை நோக்கி கூப்பிடுபவர்களிடையே நீர் மறுமலர்ச்சியைக் கொண்டுவரவும், பசியால் வாடுபவர்களிடையே ஒரு புதுணர்ச்சியை ஏற்படுத்தவும், ஆனால் இன்னும் தங்கள் பசி இயேசுவுக்காக இருப்பதை உணராதவர்களிடையே ஒரு எழுச்சியை ஏற்படுத்தவும் நான் ஜெபிக்கிறேன் . தயவுசெய்து உமது மக்களுக்கு மறுமலர்ச்சியைக் கொண்டு வாருங்கள், இயேசுவை தங்கள் இரட்சகராக அறிய வேண்டியவர்களுக்கு கிருபையின் ஊற்றைக் கொண்டு வாருங்கள். இயேசுவின் நாமத்தினாலே அதிக எதிர்பார்ப்புடன் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து