இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
இன்று இதை எளிமையாக வைத்துக்கொள்வோம். முதலாவதாக, வாழ்க்கையின் சிக்கல்கள் மற்றும் குழப்பங்களுடன், நம்மில் உள்ள அதிக புத்திசாலிகள் கூட அவ்வளவு ஞானிகள் அல்ல என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். இரண்டாவதாக, நம் தேவனாகிய கர்த்தர் பரிசுத்தத்திலும், மகத்துவத்திலும், வல்லமையிலும், ஞானத்திலும், கிருபையிலும் பிரமிக்கத்தக்கவர். நம் தேவன் நம்மை விட மிக உயர்ந்தவர். அவர் மகிமையை நாம் உண்மையிலேயே புரிந்துகொள்ளக்கூடியது மிகச்சிறிய துளிகள் மட்டுமே - "இதோ, இவைகள் அவருடைய கிரியையில் கடைகோடியானவைகள்" (யோபு 26:14 ). இறுதியாக, தீமைக்கு வழிவகுக்கும் எந்த ஒரு காரியத்திலிருந்தும் விலகி இருப்போம், தீமை நம்மைத் தொற்றிக் குழப்புகிறது, அதே போல் தேவனிடமிருந்து நம்மைப் பிரிக்கிறது என்பதை அறிந்துகொள்வோம்.
என்னுடைய ஜெபம்
ஞானமும் கிருபையும் நிறைந்த பரலோகத்தின் தகப்பனே, உம்முடைய ஞானம் ஒப்பற்றது, உம்முடைய கிருபை அளவிட முடியாதது, உம்முடைய பரிசுத்தம் ஒப்பிடமுடியாதது, உம்முடைய அன்பு புரிந்துகொள்ள முடியாதது. உம்முடைய பல ஆசீர்வாதங்களின் ஈவுகளுக்காகவும் நன்றி, ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, உம்மை கிட்டி சேரும்படி கொடுத்த நல்ல ஈவுக்காக நான் நன்றி கூறுகிறேன். உம் அன்பான இரக்கத்தின் காரணமாக உம்முடைய மாறாத கிருபையையும் உம் பிரசன்னத்தையும் எங்களுக்கு அணுக அனுமதித்துள்ளது. சோதனையைத் தாங்கும்படி உமக்கான என் விருப்பத்தை பெலப்படுத்தும்போது தீமை என்னவென்று காண எனக்கு வேண்டிய ஞானத்தை கொடுக்கும் . உம்மிடமும் உம் அன்பிடமும், கிருபையிடமும் நான் நெருங்கி வரும்போது தீமையிலிருந்தும் அதன் செல்வாக்கிலிருந்தும் வெகு தொலைவில் இருக்க ஆவிக்குரிய விருப்பத்துடன் எனக்கு அதிகாரம் அளிக்கவும். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.


