இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
அவருடைய இரட்சிப்பை நமக்கு அளிப்பதற்கு நாம் "நல்லவர்களாகும்" வரை தேவன் காத்திருக்கவில்லை. இந்தச் சூழலில் (ரோமர் 5:6-10) கிருபையின்றி நம்மை விவரிக்கும் வார்த்தைகளை கவனியுங்கள்: பெலனற்றவர்கள், தேவபக்தியற்றவர்கள், பாவிகள் மற்றும் அக்கிரமகாரர்கள். நாம் காணாமற்போனவர்களும், அவருடைய கிருபை மிகவும் இன்றியமையாதபோது தேவன் இயேசுவானவரை அனுப்பினார். அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம். (1 யோவான் 3:16). இது அறிவிக்கப்பட்ட அல்லது உணர்ந்ததை விட அதிகம்; இது மிகவும் பிரகாசமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று!
என்னுடைய ஜெபம்
பரிசுத்தமும் அன்புமுள்ள பிதாவே, இயேசுவின் மூலமாக உமது அன்பை இவ்வளவு வல்லமை வாய்ந்த மற்றும் தியாக வழிகளில் வெளிப்படுத்தியதற்கு நன்றி. அவருடைய நாமத்தினாலே ஜெபிக்கிறேன்,ஆமென்.