இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் விரும்பப்பட வேண்டும் என்பதற்காக, நமது தனித்துவத்தையோ, நமது மீட்பின் செல்வாக்கையோ, அல்லது நம்மைச் சுற்றியுள்ளவர்கள் மீதான நமது அன்பான தாக்கத்தையோ நாம் ஒருபோதும் கைவிட இயேசு விரும்பவில்லை. நமது கலாச்சாரத்தை மேலும் அழிக்ககூடிய , கசப்பு, வெறுப்பு மற்றும் பிற இழிவான சமூகப் பிரச்சினைகளிலிருந்து இவ்வுலகை பாதுகாக்கும் உப்பாக நாம் இருக்க வேண்டும் என்பது தேவனுடைய நோக்கமாகும் . மேலும், நாம் வாழும் கசப்பான, மற்றும் தீய உலகை அதின் சாரத்தை மாற்றும் தேவனின் கிருபை மற்றும் இரக்கம் என்ற உப்பாக நாம் இருக்க வேண்டும். நாம் இவ்வுலகத்திற்கு உப்பாக இருக்க வேண்டும், சிதைவைத் தடுக்கும் மற்றும் இயேசுவின் இனிமையான சுவையை இழந்த உலகத்திற்குக் கொண்டு வரும் அன்பின் சீஷர்களாக இருக்க வேண்டும்.

என்னுடைய ஜெபம்

அன்பும்,பரிசுத்தமும் மாட்சிமையும் நிறைந்த ஆண்டவரே, என்னைச் சுற்றியுள்ள உலகின் காரியங்களுக்கு ஏற்ப அடியேன் வடிவமைக்கப்படுவதை எதிர்க்க எனக்கு அதிகாரம் தாரும் . அதற்கு பதிலாக, அன்புள்ள பிதாவே, தயவுசெய்து ஒரு கிறிஸ்தவராக, இயேசுவின் சீஷனாக எனது தனித்துவத்தைப் பயன்படுத்தி, மற்றவர்களை ஆசீர்வதிக்கவும், உமது ராஜ்யத்தின் செல்வாக்கையும், தாக்கத்தையும் விரிவுபடுத்த அடியேன் இரக்கத்துடனும் மரியாதையுடனும் செய்ய வழிநடத்தும் (1 பேதுரு 3:15-16). இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து