இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
பவுலானவர் ஒரு ரோமானிய சிறையில் மரணத்தை எதிர்கொண்டிருக்கலாம். இருப்பினும், விசுவாசத்தினால், தனது ஜீவனும், எதிர்காலமும் கர்த்தருடைய கரங்களில் பாதுகாப்பாக இருப்பதை அவர் அறிவார். துன்பங்கள் , கஷ்டங்கள் மற்றும் மரணத்தை எதிர்கொண்டாலும் அவருக்கு பெற்றுக்கொள்ள வேண்டியதை அடையும்படி பரிசுத்த ஆவியானவர் அவருக்கு அதிகாரம் அளிப்பார். அவரது நித்திய இரட்சிப்புக்காக பரிசுத்த ஆவியானவர் எல்லாவற்றையும் ஒன்றாகச் செய்வார் (ரோமர் 8:28). மற்றவர்களுக்கு ஊழியம் செய்ய அவர் சிறையிலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுவிக்கப்படுவார் அல்லது சிறையிலிருந்தும் மரணத்திலிருந்தும் அவர் நேசிக்கும் கர்த்தரின் சமூகத்தில் விடுவிக்கப்படுவார். எப்படியிருந்தாலும், அவர் விடுதலைக்காகக் காத்திருக்கிறார், எதிர்பார்க்கிறார்! ஏன்? ஏனென்றால் அவரது வாழ்க்கையும் எதிர்காலமும் இயேசுவுக்குள் பாதுகாப்பாக உள்ளன (கொலோசெயர் 3:1-4).
என்னுடைய ஜெபம்
பரலோகத்தின் பிதாவே , சர்வவல்லமையுள்ள தேவனே, உம்முடைய மீட்பின் மீதான என் நம்பிக்கையில் ஒருபோதும் தடுமாறாதபடி எனக்கு தைரியத்தைத் தாரும். கூடுதலாக, அன்புள்ள பிதாவே, சரீர ரீதியான பிரச்சினைகளால் தங்கள் ஜீவனுக்காக போராடும் பல அன்பான நண்பர்கள் எனக்கு உள்ளனர். அவர்களை முழு ஆரோக்கியத்திற்கு மீட்டெடுக்கும் உமது குணப்படுத்துதலின் மூலமாகவோ அல்லது அவர்கள் இந்த வாழ்க்கையிலிருந்து இயேசுவின் பிரசன்னத்திற்குச் செல்லும்போது உமது கிருபையின் மூலமாகவோ (பிலிப்பியர் 1:19-24) உமது அன்பின் விடுதலையால் அவர்களை ஆசீர்வதியும். எப்படியிருந்தாலும், பிதாவே, உம்முடைய ஜெய குமாரனாகிய இயேசுவின் மூலமாக நீர் அவர்களை விடுவிப்பீர் என்று நான் நம்புகிறேன், அவருடைய நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.


