இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் உள்ள பிரதான கேள்வி இதுதான்: மரிப்பதற்கும் அதேவேளை வாழ்வதற்கும் ஏதாவது ஒரு காரியம் இருக்கிறதா? பவுலானவர் சிறைசாலையில் மரணத்தை எதிர்கொண்டபோது, அவர் தைரியமாகவும் நேர்மையாகவும் "ஆம்!" என்று பதிலலித்தார். "கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்" என்று சொல்ல முடிந்தது. கிறிஸ்துவே அவருடைய பதிலாகவும், வாழ்வதற்கான காரணமாகவும், மரணத்திற்கு பிறகு நம்பிக்கையாகவும் இருந்தார். நமது விசுவாசம் நம்மை இதேபோன்ற ஒன்றைச் சொல்ல வழிநடத்த வேண்டும், இல்லையெனில் நமக்கு அழிந்து போகாத, கெட்டுப்போகாத அல்லது மங்காது போகும் பரலோகத்தின் மீது நம் நம்பிக்கை வைக்கப்படாமல் இருக்க வேண்டும் (1 பேதுரு 1:4). இயேசுவுக்குள் அன்பான நண்பரே, நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் சமூகத்திலே , நாம் அவரைப் போலவே மறுருபமாக்கப்படும்போது , அவர் மெய்யாகவே மகிமையில் இருப்பதால், நாம் அவரைப் தரிசிக்கும்போது , நீங்களும் நானும் ஒன்றாகக் கொண்டாட முடியும் என்று நான் ஜெபிக்கிறேன் (1 யோவான் 3:1-3; கொலோசெயர் 3:1-4).
என்னுடைய ஜெபம்
ஆண்டவரே, நான் செய்த அல்லது சொன்ன காரியங்களினால் கிறிஸ்துவின் கிரியையை மற்றவர்கள் என்னில் பார்ப்பதை மிகவும் கடினமாக்கியதற்காக என்னை மன்னித்தருளும். எங்கள் "சிறிய நீல கிரகத்தில்" நீர் எனக்குக் கொடுக்கும் பல ஆண்டுகள், இயேசுவிற்கும் அவரது வல்லமையுள்ள கிருபைக்கும் ஒரு ஜீவனுள்ள சாட்சியாக இருக்க விரும்புகிறேன். கிறிஸ்து ஜெயமுடன் வந்து என்னை மறுபடியும் உம்மிடம் கொண்டு வரும் நாளை நான் எதிர்நோக்குகிறேன். அந்த நாள் வரை, இயேசுவை விசுவாசிக்க மற்றவர்களைக் கொண்டுவரவும், அவருடைய எதிர்காலத்தில் பங்கு கொள்ளவும் என்னை உம் ஊழியத்தில் பயன்படுத்தியருளும் . எனக்காக நீர் என்ன வைத்திருந்தாலும் சரி, என் எதிர்காலத்தை உம் ஜெய குமாரனும் என் இரட்சகருடனும் இணைத்துள்ளீர்கள் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். மிகுந்த எதிர்பார்ப்புடனும் மற்றும் நம்பிக்கையுடனும் அவரது நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.


