இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
பவுலானவர் பிலிப்பியர்களுக்காக உள்ளத்தின் ஆழத்திலிருந்து மகிழ்ச்சியுடனும் , நன்றியுடனும் ஜெபித்தார், ஏனென்றால் அவர்கள் அவருடன் சுவிஷேச ஊழியத்தில் பங்காளிகளாக இருந்தனர் - அவர்கள் அவருடைய ஊழியத்துக்கு உற்சாகப்படுத்துபவர்களை விடவும், பொருளாதார உதவிகளை செய்யும் கிறிஸ்தவர்களை காட்டிலும் இன்னும் அதிகமான உதவிகளை செய்து வந்தனர். பிலிப்பி பட்டணத்திலுள்ள விசுவாசிகள் பவுலின் ஊழியத்தில் தங்களுடைய நிதி உதவி, ஜெபம் , அன்பு, ஊக்கம் மற்றும் அவரது முயற்சிகளில் ஆர்வம் ஆகியவற்றின் மூலமாகவும் பங்குகொண்டனர். இயேசுவின் நற்செய்தியுடன் தொலைந்து போன மக்களை இரட்சிப்புக்கேற்ற வழியில் நடத்தும் அவரது ஊழியத்தில் அவர்கள் முழு பங்காளிகளாயிருந்தனர் ! நாமும் அவர்களைப் போல நமது சபைகளில் மற்றும் குழுக்களின் ஊழிய பாதையில் அதிகமான ஆர்வம் காட்டுவோம். ஜெபம் செய்வோம், ஊழியங்களில் பங்களிப்போம், நமது உடன் ஊழியர்களை அறிந்து கொள்வோம். கர்த்தருடைய நற்செய்தியை உலகம் முழுவதும் பகிர்ந்து கொள்ளும்போது, இயேசுவின் நற்செய்தியில் நமது பங்காளிகளை அறிந்து கொள்வோம்!
என்னுடைய ஜெபம்
பரலோகத்திலிருக்கிற எங்கள் பிதாவே, உமது சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவதுபோல் பூமியிலும் செய்யவேண்டுமென்று ஜெபிக்கிறேன். தயவு செய்து உம்முடைய ராஜ்யத்தின் வளர்ச்சியை ஆசீர்வதித்து பெலப்படுத்துங்கள் . எங்கள் சபையோடு ஐக்கியமாய் இருக்கும் மற்ற சபைகளையும் , அவர்கள் உலகத்தில் எந்த பகுதியில் ஊழியம் செய்தாலும் அவர்களைப் பாதுகாத்து பெலப்படுத்துங்கள். அவர்களுக்கு ஊழியத்திற்கு தேவையான காரியங்கள் , முதிர்ச்சி, தைரியம் மற்றும் குணாதிசயம் போன்ற பண்புகளினால் ஆசீர்வதியும் . அவர்களின் முயற்சிகளில் அவர்களை ஆதரிக்கவும், ஊக்குவிக்கவும், ஆசீர்வதிக்கவும் என்னால் செய்ய முடியும் என்ற காரியங்களை அடையாளம் கண்டுகொள்ள எனக்கு உதவியருளும் . இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.