இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவன் இஸ்ரவேலர்களை தம்முடைய விசேஷித்த தேசத்தாராக இருக்கும்படி தெரிந்துக்கொண்டார் . இது மற்ற தேசத்தாரை விட சிறந்ததாகவோ அல்லது பிரகாசமாகவோ இருந்ததால் அல்ல. இல்லை, தேவன் ஆபிரகாம் மீது கொண்ட அன்பின் காரணமாக அவர்களைத் தேர்ந்தெடுத்தார், அதனால் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்கள் மூலமாக பூமியிலுள்ள அனைத்து தேசங்களையும் உலக இரட்சகராகிய மேசியாவை தந்து ஆசீர்வதித்தார். இந்த மேசியாவை நாம் அறிவோம். அவருடைய நாமம் இயேசு என்பதே , அவரே உலகத்தின் ஒளியாய் இருக்கிறார் !

என்னுடைய ஜெபம்

பிதாவே, உமது மிகுந்த இரக்கத்தினாலும், கிருபையினாலும், தயவினாலும், உமது இரட்சிப்பினால் என்னை ஆசீர்வதித்தீர் என்பதை நான் அறிவேன். உம்முடைய மாபெரிதான ஆசீர்வாதங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள அடியேனை ஒப்புக்கொடுக்கும்போது தயவுக்கூர்ந்து எனக்கு பெலனை தந்தருளும் . இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து