இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
பரிசுத்த ஆவியினால் நிறைந்திருப்பதை குறித்து நாம் பேசவேண்டியது அவசியமான காரியம். நாம் நம்முடைய வாழ்வில் பரிசுத்த ஆவியின்கீழாயும், வழிகாட்டுதலின்படியாய் வாழ்வது மற்றொரு வழியாகும் . நாம் அதிகம் பேசுவதை தவிர்த்து கிரியையினால் நடக்கவேண்டுமென்று பவுலானவர் நமக்கு நினைப்பூட்டுகிறார். நாம் பேசுகிறதான அளவையும், ஒழுக்கத்தை தீர்மானிப்பதிலும், நம் முடிவுகளின் எல்லாவற்றிலேயும் பரிசுத்த ஆவியானவர் நம்மை வழிநடத்தவேண்டும். பரிசுத்த ஆவி நம்முடன் இருக்கும்போது இந்த ஆவியின் கனியாகிய , அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; ஆகிய காரியங்கள் சாட்சியாக விளங்கும். இப்படி கிறிஸ்துவுக்குள் வாழ்கிறதான பரிசுத்தவான்களுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் உரைக்கிறது என்னவென்றால் நாம் ஆவியினால் நடந்தப்படும்போது அந்த பரிசுத்த ஆவியின் சத்தத்தை கேட்டு ஜீவிக்கவேண்டும்.
என்னுடைய ஜெபம்
பரிசுத்த தேவனே, பரிசுத்த ஆவியின் ஈவுக்காக உமக்கு நன்றி, அவர் எனக்குள் ஜீவிக்கிறபடியால் உம்முடைய நல்ல ஆவி என்னை நலமான பாதையிலே நடத்தி, வார்த்தையிலும், கிரியையிலும் இயேசு கிறிஸ்துவை போல என்னை வனைந்து கொள்ளும். இயேசுவின் நாமத்திnale ஜெபிக்கிறேன். ஆமென்.


