இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஒரு வெளிப்புற அடையாளத்தை விட, ஞானஸ்நானம் நம்மை நற்செய்தியின் மையத்திற்கு அழைத்து செல்கிறது (1 கொரிந்தியர் 15:1-4) மற்றும் நமது விசுவாசத்தை அடிப்படையாக கொண்டு (கலாத்தியர் 3:26-29) கிருபையினால் அதில் பங்குபெறுகிறோம் (ரோமர் 6:1-15) . தேவனை பிரியப்படுத்த இயேசு தனது ஊழியத்தின் துவக்கத்தில் செய்ததை போல நாமும் செய்வது நம்பமுடியாத ஓர் ஆசீர்வாதமாகும் (லூக்கா 3:21-22), மேலும் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பிய தேவனின் வல்லமையில் மீது நம்முடைய விசுவாசத்தை வைப்பதன் மூலமாக , அந்த நித்திய மகிமையில் நாம் பங்குகொள்ளும் வரை தேவனானவர் கிறிஸ்துவுக்குள் நம்முடன் இணைகிறார் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.(கொலோசெயர் 2:12; 3:1-4).

என்னுடைய ஜெபம்

அன்பான பிதாவே ,உம்முடைய கிருபைக்காக நன்றி. இயேசுவை மரணத்திலிருந்து எழுப்பியதற்காக நன்றி. விசுவாசத்தின் மூலம் அவருடைய மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றில் பங்கு கொள்ள என்னை அனுமதித்ததற்காக நன்றி. அவருடைய மகிமையில் நானும் பங்கு கொள்வேன் என்று உறுதியளித்ததற்காக நன்றி. உமக்கு மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் தரும் உம்முடைய அன்பின் பிள்ளையாக என்னை அனுமதித்ததற்காக நன்றி! இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து