இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தொழுகை என்பது ஒரு இடத்தைப் பற்றியது அல்ல, மாறாக நம் பிதாவாகிய தேவனை பற்றியது என்று இயேசு நமக்குக் போதிக்கிறார் (யோவான் 4:21-24). பரலோகத்திற்குரியவர்கள் நம் பிதாவாகிய தேவனை தொழுதுக்கொள்ளுகிறவர்கள் என்பதை நாம் அறிவோம் , நாம் எங்கு இருந்தாலும், அதைச் செய்ய நம்மை உற்சாகப்படுத்தவும் , தாழ்மைப்படுத்தவும் , பெலப்படுத்தவும் வேண்டும். மற்ற எல்லா குணங்களுக்கும் மேலாக, பிதாவாகிய தேவன் பரிசுத்தமுள்ளவர். பரலோகத்திலே வாசம் செய்யும் தேவ தூதர்கள் அவரது பரிசுத்தத்தை மூன்று முறை ஒப்புக்கொள்கிறார்கள்: "பரிசுத்தர் , பரிசுத்தர் , பரிசுத்தர் ...!" ஏன்? ஏனென்றால் தேவனானவர் ஒப்பற்றவர் , மாசில்லாதவர் , பரிசுத்தமானவர் , பரிபூரணமானவர், ஈடு இணையற்றவர் . நமது அன்றாட வாழ்வில் மற்றும் இவ்வுலகிலே சர்வவல்லமையுள்ள தேவனுக்கு நிகராக எதுவுமில்லை . அவருடைய மகிமை வானத்தையும், பூமியையும் நிரப்புகிறது. நாம் கற்பனை செய்யக்கூடிய அனைத்தையும் விட அவர் மகா மேன்மையுள்ளவர் . அவரே நம்முடைய பயபக்திக்கும் , கனத்திற்கும் , பிரமிப்புக்கும், தொழுது கொள்வதற்கும் தகுதியானவர் .

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள தேவனே , பரிசுத்த பிதாவே, அநாதியாய் பரிசுத்தமுள்ள ராஜாதி ராஜவே , உமது கிருபையின் அழகான ஈவுக்காக நான் உம்மைப் போற்றுகிறேன். உமது மகிமையோடு ஒப்பிடும் போது, ​​உம்முடைய சமூகத்தில் இருப்பதற்கு நான் தகுதியற்றவன் என்பதை நான் அறிவேன். ஆனால், என் பாவங்களுக்காக மரித்த தேவ ஆட்டுக்குட்டியான இயேசுவின் மாசற்ற இரத்தத்தால், நீங்கள் என்னைத் தகுதியுள்ளவனாக மாற்றினீர் - "அவருடைய பார்வையில் பரிசுத்தமானவனாகவும், குற்றமற்றவனாகவும், மாசில்லாதவனாகவும் " (கொலோசெயர் 1:22) இருக்கும்படி செய்தீர் . இந்த நம்பமுடியாத ஈவுக்காக உமக்கு கோடான கோடி நன்றி, அதனால் நான் உம்மை உள்ளத்தின் ஆழத்திலிருந்து தொழுதுக்கொள்ள வேண்மென்று விரும்புகிறேன்! இயேசுவின் பரிசுத்த நாமத்தின் மூலமாய் அடியேன் உம்மைப் போற்றி, துதித்து ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து