இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
நம்மில் பலருக்கு மற்றவர்களுடைய தவறுகளை கண்டுபிடிப்பது மிகவும் எளிதான காரியம் ஆனால் நம்முடைய தவறுகளை கண்டுபிடிப்பது தந்திரமுள்ளது. மற்றவர்களிடம், நீங்கள் எப்படி வாழ வேண்டும் என்று சொல்வதைவிட, முதலாவது நம்முடைய வாழ்விலுள்ள குறைகளையும் , பாவங்களையும் நாம் கையாள வேண்டுமென்று இயேசுவானவர் நமக்கு நினைப்பூட்டுகிறார். இவை பார்ப்பதற்கு மிகவும் எளிமையாக தோன்றுகிறது இல்லையா ? ஆனால் அது அப்படியல்ல என்று நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம்.
என்னுடைய ஜெபம்
பிதாவே, மற்றவர்களிடம் மோசமாகவும் , கடுமையாகவும், நியாயந்தீர்க்கிறவனாகவும் இருந்தமைக்காக என்னை மன்னியும். அடியேனுடைய வாழ்க்கையில் பிரச்சனைகள் உண்டென்றும் அதற்கு பரிசுத்தாவியின் கிரியைகள் தேவையென்றும் அறிவேன். எனக்கு நானே மென்மேலும் சாக்குப்போக்கு சொல்லிக் கொள்ளுகிற வழக்கமான பாவங்கள் என் வாழ்க்கையில் உண்டென்று அறிக்கையிடுகிறேன். அன்புள்ள பிதாவே, தயவுகூர்ந்து என் பாவங்களை மன்னித்து இவைகளை கடந்து செல்லும்படி பெலன் தந்தருளும். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.