இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

அநேக கிறிஸ்தவ அடக்க ஆராதனைகளில் , பரலோகத்தில் அவருடன் நித்தியமாய் வாழ நமக்கு ஒரு இடத்தை ஆயத்தம் செய்வதற்காக இயேசு எவ்வாறு புறப்பட்டுச் சென்றார் என்பதை போதகர் நமக்கு வலியுறுத்துகிறார். மறுபடியுமாய் நமக்காக திரும்பி வரப் போகிறார். ஆனால் சில வசனங்களுக்குப் பிறகு, இயேசு இந்த வாக்குத்தத்தத்தை கூறியிருக்கிறார் . நாம் மறுபடியுமாய் அவருடன் சேர்ந்து வாழும் அந்த நாள் வரை, இவ்வுலகில் அவர் நம் இருதயங்களில் நம்முடன் வாசம் செய்கிறார் என்று அவர் கூறுகிறார். இது அனைத்தும் ஒரு விஷயத்தைச் சார்ந்துள்ளது: அவரை உண்மையாக நாம் அன்புக்கூர விரும்புவோமானால் - அந்த அன்பு கீழ்ப்படிதலுக்கு வழிவகுக்கும். இது ஒரு மோசமான உடன்படிக்கையல்ல, இல்லையா? ஆகவே, கீழ்ப்படிதல் என்பது நம் வாழ்க்கை ஜீவியத்தில் மறக்கப்பட்ட வார்த்தையாக இருக்க வேண்டாம்!

Thoughts on Today's Verse...

At many Christian funerals and memorials, the preacher emphasizes that Jesus has gone to prepare a place for us to join him in heaven, but will one day come back for us and bring us home with him (John 14:1-3). Just a few verses later, the Lord deepens his promise. He promises that if we love him and obey him, he will love us and reveal himself to us (John 14:21). On top of that, he and the Father will love us and make their home in us until we can go home to be with them (John 14:23). As we love God and obey Jesus' commandments, our relationship, closeness, and experience of God's presence as Father, Son, and Holy Spirit, deepens because they live inside us — make their home with us. Obeying Jesus' teaching is our pathway to a closer walk with God!

என்னுடைய ஜெபம்

பரிசுத்த தேவனே, இயேசு பூமிக்கு வந்து உமது சித்தத்திற்கு கீழ்ப்படிந்தார் என்பதை நான் அறிவேன். எனக்கு பகுத்தறியத்தக்க ஞானத்தைத் தாரும் , அதனால் என் கீழ்ப்படிதல் வெறுமனே உம் வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவதாக இருக்காது, மாறாக உம்முடைய சித்தத்தின்படி வாழ வேண்டும் என்ற ஒரு ஆவலாக இருக்கும். அடியேனை இரட்சிக்க நீர் இவ்வளவு மேன்மையான காரியங்களை செய்திருப்பதால், நான் உம்மை கனப்படுத்த விரும்புகிறேன். நன்றி. இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

My Prayer...

Holy God, I know Jesus came to earth and obeyed your will. Please bless me with the discernment I need to fully obey you. I desire that my obedience will not just be the strict obedience of your words, but a deep longing to live according to your will. I long to honor you because you have done so much to save me. Thank you. In Jesus' name I thank and praise you. Amen.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள help@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

Today's Verse Illustrated


Inspirational illustration of யோவான்- 14:23

கருத்து