இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
தொடர்ச்சியான துன்பங்களை எதிர்கொள்பவர்களை, அல்லது சமரசம் செய்யும் சூழ்நிலையில் இருக்கும் எளிய மக்களைப் பயன்படுத்திக் கொள்பவர்களை, தேவனானவர் வெறுக்கிறார். திக்கற்றவர்கள் , பெலவீனர்கள், ஏழைகள் அல்லது பின்தங்கியவர்களை தங்கள் ஆதாயத்துக்காக வசப்படுத்திக் கொள்பவர்களை , தேவன் அவர்களின் செயல்களைப் பார்க்கிறார் என்பதையும், அவர்கள் அவருக்கு கணக்குக் ஒப்புவிக்க் வேண்டும் என்பதையும் அறிந்திருக்க வேண்டும். துன்பத்தில் இருப்பவர்களை தேவனானவர் பார்க்கிறார் என்றும் , அவர்கள் மீது அக்கறை காண்பிக்கிறார் என்றும் , ஏற்ற நேரத்தில் உதவி செய்வார் என்றும் நம்பி அவர்மீது நம்பிக்கை வைக்க வேண்டும். மேலே சொன்ன நபர்களில் எந்த வகையிலும் அப்படி இல்லாதவர்கள், சிரமங்களையும் கஷ்டங்களையும் எதிர்கொள்பவர்களின் இரட்சிப்புக்காக மற்றும் ஆசீர்வாதத்திற்காக உழைக்க வேண்டும். அதுவே தேவனுடைய இருதயத்தின் வாஞ்சையாய் இருக்கிறது (சங்கீதம் 68:5; ஏசாயா 10:1-3).
என்னுடைய ஜெபம்
கிருபையுள்ள தேவனே , எனக்கு தெரிந்த பலர் அதிகமான துன்பம் மற்றும் மனவேதனையில் இருக்கும் போது அவர்களை ஆசீர்வதித்தருளும் . அவர்களுக்கு ஊழியம் செய்ய அடியேனை எடுத்து பயன்படுத்துங்கள். ஆனால் தயவு செய்து, அன்பான பிதாவே , அவர்களை உமது பரிசுத்த ஆவியினால் நிரப்பியருளும் , அப்போது அவர்கள் நம்பிக்கையுடன் எல்லாவற்றையும் தாங்கிகொள்வதற்கு தேவையான பெலத்தையும் தைரியத்தையும் பெறுவார்கள். யாவரும் உமது கிருபையை அறிந்து, உமக்கு மகிமையைக் கொண்டு வரும் படி, உம்மிடமிருக்கும் தெளிவான மீட்பினால் அவர்களை ஆசீர்வதியும். நான் இவை யாவற்றையும் இயேசுவின் நாமத்தினாலே கேட்டு , ஜெபிக்கிறேன். ஆமென்.