இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
"விசுவாசிக்கிறவனுக்கு" இயேசுவே முடிவாய் இருக்கிறார். எந்த காரியங்களானாலும் அவரால் கூடும். என்ன தெரியுமா? அவர் நம் மூலமாகவும் பெரிய காரியங்களைச் செய்ய சித்தமாயிருக்கிறார் ! மெய்யாகவே , அவர் இவ்வுலகிலே வாழ்ந்தப் பொழுது செய்ததை விட இன்னும் பெரிய காரியங்களை நம் மூலமாகச் செய்வேன் என்று வாக்குறுதி அளித்தார், ஏனென்றால் அவர் இப்போது பிதாவின் வலதுப்பாரிசத்திலே வீற்றிருந்து நமக்கு உதவிச்செய்ய காத்திருக்கிறார் ! (யோவான் 14:12-14.) அப்படியானால், நம்மால் செய்ய முடியாத காரியங்களை பற்றி பேசுவதை விட்டுவிட்டு, இன்னும் ஆச்சரியமான விஷயங்களையும் , நம்மால் கற்பனை செய்ய முடியாத விஷயங்களைச் செய்யக்கூடிய ஒருவரை விசுவாசிக்க தொடங்குவதற்கான நேரம் இதுவல்லவா? பவுலானவர் இதை இவ்வாறு கூறினார்: "நாம் வேண்டிக் கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு, " (எபேசியர் 3:20-21). எனவே, அவர் செய்யும் பெரிய காரியங்களினால் தம்மைத் தாமே மகிமைப்படுத்தும்படி தேவனிடம் கேட்போம், அவர் அவற்றை செய்வார் என்று விசுவாசிப்போம்!
என்னுடைய ஜெபம்
மகா சர்வவல்லமையுள்ள தேவனே , ராஜ்யங்களை ஆளுகிறவரே, இவ்வுலகம் யாவற்றையும் உண்டாக்கினவரே , மற்றும் எல்லாவற்றிற்கும் ஆண்டவரே , தயவுக்கூர்ந்து அடியேனை மன்னித்தருளும் . என் நம்பிக்கையின்மையால் நான் சோர்வுடனும் மற்றும் குறைந்த அளவிலே ஜெபங்களை ஜெபித்த நேரங்களுக்காகவும் என்னை மன்னியுங்கள். என்னைத் திசைதிருப்பும் சாதாரணமான மற்றும் சம்பந்தமில்லாத விஷயங்களை குறித்து சின்னச் சின்ன சண்டைகளில் அடியேன் ஈடுபட்டதற்காக மன்னித்தருளும் . ஆவிக்குரிய தரிசனம் இல்லாததற்காக என்னை மன்னியுங்கள். தயவு செய்து உம்முடைய பரிசுத்த ஆவியின் மூலமாக அடியேனுடைய ஆவியை தட்டியெழுப்பும்படி கேட்கிறேன். அடியேனை கொண்டு நீர் நடப்பிக்க விரும்பும் காரியங்களை பார்க்கும்படி என் மனக்கண்களை திறந்தருளும் . இருளிலே சிக்கித்தவிக்கும் உலகத்திற்கு வல்லமையுள்ள சாட்சியின் ஒளியாக இருக்க எனக்கு அதிகாரத்தைத் தாரும் . உம் ராஜ்யத்திற்கான ஆச்சரியமான தரிசனத்தையும் மற்றும் , உம்மை மகிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற ஆர்வத்தையும் எனக்கு தாரும் , பின்னர் நான் நினைக்கிறதற்கும், வேண்டிக்கொள்வதற்கும் மிகவும் அதிகமான காரியங்களை செய்ய என்னை ஆச்சரியப்படுத்துங்கள். இயேசுவின் நாமத்தினாலே , உமக்கு மகிமையையும் துதியையும் செலுத்தி , ஜெபிக்கிறேன். ஆமென்.