இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இந்த நாளின் தேதியைப் பிரதிபலிக்கும் வகையில் இந்த ஆண்டிற்கான எங்கள் எல்லா வசனங்களையும் தேர்ந்தெடுத்துள்ளோம்.ஒரு மாதிரியாக இன்று மே மாதம் 23ஆம் தேதி , எனவே அதிகாரம் 5 மற்றும் வசனம் 23 அல்லது 5:23 இல் இருந்த ஒரு வசனப் பகுதியைக் கண்டோம். எங்கள் "இன்றைக்கான வசனத்தை" தேர்ந்தெடுக்கும் இந்த வழி, நமக்கு சவால் விடுகிறது மற்றும் நாம் கவனிக்காமல் இருக்கும் வசனங்களைக் கண்டறிய ஆசீர்வதிக்கிறது. "இன்றைய வசனம்" அப்போஸ்தலனாகிய பவுலின் ஆசீர்வாதமாகும், அதை நாம் கடந்து செல்ல விரும்பவில்லை! மெய்யான நீதியும், பரிசுத்தமும் நம் பரலோகத்தின் தேவன் ஒருவரே முழுமையாகப் உடையவர் என்பதை நாம் அறிவோம். ஆச்சரியப்படும் விதமாக, நாம் அவருடைய கரங்களுக்குள் ஒப்புவித்து வாழும்போது , ​​அந்த குணங்களை நம் வாழ்வில் வளர்ந்து வரும் சத்தியமாக மாற்ற தேவன் தம் பரிசுத்த ஆவியைப் பயன்படுத்துகிறார். நேற்றைய தினத்தின் தியானப் பகுதியில் , நமது பலவீனமான பகுதிகளில் நம்மை முதிர்ச்சியடையச் செய்வதில் பரிசுத்த ஆவியானவர் செயல்பட அனுமதித்தோம். இன்றைக்கு ஏதாவது ஒரு நேரத்தில் கூடுதலாக ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் ஒதுக்கி, தேவனுடைய வார்த்தையைத் திறந்து, நாம் பெற விரும்பும் குணநலன்களுக்குப் பொருந்தும் வேதத்தில் உள்ள வசனப் பகுதிகளைப் படிப்போம் - 2 பேதுரு 1:2-11 நமக்கு உதவும் ஒரு சிறந்த பகுதியாக நான் கருதுகிறேன் . கிறிஸ்துவைப் போல இந்த பகுதிகளில் நம்மை வளர்க்க பரிசுத்த ஆவியின் ஒத்தாசையை தேவனிடம் கேட்போம்!

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பிதாவே , இயேசுவானவர் கிருபையினாலும் மகிமையினாலும் நிறைந்தவராய் விரைவில் வருவார்! அன்பான பிதாவே , என் பெலத்தினாலும், முயற்சியினாலும் அல்ல, மாறாக என்னுள் செயல்படும் உமது மறுரூபமாக்கும் வல்லமையினால் நான் குற்றமற்றவனாக அந்நாளில் காணப்படுவேனாக. இயேசுவின் நாமத்தினாலே , நான் இதைக் கேட்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து