இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

கொல்கொதாம் சிலுவையில் நம் அனைவரின் பாவத்திற்காக இயேசுவானவரின் தியாகம் ஒரு மறு யோசனையோ , தவறோ அல்லது திருத்தப்பட்ட காரியமோவல்ல . இயேசு தேவனுடைய அபிஷேகமாக, அவருடைய பரிசுத்த மேசியாவாக,உலக மக்களின் பாவங்களுக்காக மரித்து, யாவருடைய வாழ்கைக்கு அழியாமையையும் ஜீவனையும் கொண்டு வந்தார். தீயவர்களும், தங்கள் ஸ்தானத்தையும் தங்கள் பதவியையும் தக்க வைத்துக் கொள்ள அவரைக் கொல்ல சதி செய்தவர்கள் என்ன செய்வார்கள் என்பதை தேவன் மட்டுமே அறிந்திருந்தார் ; தேவனானவர் அவர்களின் தீய செயல்களைப் பயன்படுத்தி, அவருடைய மகா கிருபையையும், நன்மையையும் நமக்குக் கொண்டு வந்தார் அவர் ஒரு சில மனிதர்களால் கிரயத்துக்கு கொல்லும்படி ஒரு தீய நோக்கத்துக்காக தீர்மானிகாப்பட்டார் , ஆயினும் தேவன் அவரை அனைவருக்கும் இரட்சிப்பின் ஆதாரமாக மாற்றினார் , மேலும் இது சம்பவிக்கும்படி அவர் காலங்களுக்கு முன்பே திட்டமிட்டார்.இது மெய்யாகவே தேவனின் அன்பான கிருபையாக நீண்ட காலத்திற்கு முன்பே திட்டமிடப்பட்டுள்ளது!

என்னுடைய ஜெபம்

சர்வவல்லையுள்ள தேவனே மற்றும் அன்பான பிதாவே , நீதிக்கான உம் சித்தத்தை நிறைவேற்றி, உம்முடைய ஐசுவரியமான கிருபையையும் இரக்கத்தையும் பெற்றுக்கொள்ளும்படி நீர் அனுமதிக்கும் உம் அற்புதமான தியாகத்திற்காக நன்றி. உமது அன்பான தியாகத்திற்காகவும், உமது பரிசுத்ததின் மாதிரிக்காகவும், எனக்காகத் மறுபடியும் வருவேன் என்ற வாக்குறுதிக்காகவும் நன்றி செலுத்தி அவருடைய நல்ல நாமத்தினாலே ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து