இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

துரிதமாய் வாழ்க்கையை வாழ்வது என்பது பொறுப்பற்ற முறையில் வாழ்வது என்பதல்ல. தேவனை கனப்படுத்துவதற்காகப் பரிசுத்தமான வாழக்கை வாழ்வது, பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ள வேண்டும் என்பதை அறிந்து, ஒவ்வொரு நொடியும் நீதிக்காக வாழ வேண்டும் என்ற பரிசுத்த ஆவலோடு வாழும் வாழ்க்கையை குறிக்கிறது (எபேசியர் 6:10-12). அதாவது, நாம் இயேசுவின் ஊழியர்களாக இருப்பதால், தேவனுக்கு முழுமையாக ஒப்புக்கொடுத்து , நம்மைச் சுற்றியுள்ள உலகத்திலிருந்து வேறுபட்டு, நற்பன்புகளோடு வாழ்க்கையை வாழ வேண்டும் என்று , ​​நம்முடைய ஒவ்வொரு நொடிப்பொழுதும் அதை ஞானத்தோடு அவைகளை பயன்படுத்துவதில் கவனமாக இருக்க வேண்டும்.

என்னுடைய ஜெபம்

தேவனே , என்னை ஞானத்தால் நிரப்பியருளும் , நான் ஒவ்வொரு நாளும் அடியேன் தெரிந்தெடுக்கும் காரியங்கள் மற்றும் நேரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் உம்மைக் கனப்படுத்துவேன். தீயவரின் ஏமாற்றும் தாக்கங்களிலிருந்து என்னைப் பாதுகாத்து, ஒவ்வொரு நாளும் நீர் என்னை ஆசீர்வதிக்கும் நேரத்தை பரிசுத்தமாகவும் பயனுள்ளதாகவும் பயன்படுத்த உதவியருளும் . என் ஆண்டவராகிய , இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து